இனி மீன் விலை தாறுமாறு தான்! நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது மீன்பிடி தடைகாலம்!

இன்று (ஏப்ரல் 15) முதல் ஜூன் 15ஆம் தேதி வரையில் தமிழ்நாட்டில் மீன்பிடி தடைகாலம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

TN Fisherman

சென்னை : திருவள்ளூர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி மாவட்டம் வரை தமிழக கடற்கரையோர எல்லை பகுதியில் மீன்களின் இனப்பெருக்க காலத்திற்காக ஆண்டுதோறும் ஏப்ரல் 15 முதல் மீன்பிடி தடைகாலம் அமல்படுத்தப்படுகிறது. இந்த தடைகாலம் முதலில் 45 நாட்கள் என இருந்தது. தற்போது 60 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த மீன்பிடி தடைகாலம் நேற்று நள்ளிரவு முதல் அதாவது இன்று (ஏப்ரல் 15) முதல் 61 நாட்கள் ஜூன் 14ஆம் தேதி வரை அமலில் இருக்கும் எனக் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மீன்பிடி தடைக்காலத்தில் கடலுக்கு 3 கடல் மைல் தூரத்திற்கு அப்பால் விசைப்படகு கொண்டு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதி தொடங்கி கன்னியாகுமரியின் நீரோடி கிராமம் வரையில் 1076 மைல் தூர கடல் பகுதில் வரையில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகபட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இந்த தடை காலம் அமலில் இருக்கும்.

மீன்பிடி தடைகாலம் என்பதால் மீன் வரத்து என்பது மிக குறைவாகவே இருக்கும். இதனால் மீன்களின் விலை கணிசமான அளவுக்கு உயர்ந்து காணப்படும். பெரிய விசைப்படகுகள் மட்டுமே செல்ல கூடாது என்பதால் கட்டுமரம், சிறிய வகை நாட்டுப்படகு, பைபர் படகு ஆகியவை மூலம் 3 கடல் மைல்களுக்கு உள்ளே மீன் பிடிக்க மீனவர்கள் செல்வார்கள். அதில் போதிய மீன்கள் கிடைப்பதில்லை என்பதால் மீன்களின் விலை இந்த தடைகாலத்தில் உயர்ந்து காணப்படும்.

இந்த மீன்பிடி தடைகாலத்தில் மீனவர்களின் வாழ்வாதாரம் கருத்தில் கொண்டு அவர்களுக்கு நிவாரண தொகையாக அரசு ரூ.8 ஆயிரம் வழங்குகிறது. இதனை உயர்த்தி கேட்டும் மீனவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். மீன்பிடி தடைகாலம் என்பதால்  உள்ளூர் மீனவர்கள் பலர் வெளி மாநிலங்களுக்கு மீன்பிடி வேலைக்கு செல்வதும் உண்டு.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்