தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்தது.!
தமிழக கடலோரப் பகுதிகளில் 61 நாள் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது.
தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டத்தின்கீழ், இரண்டு மாதங்கள் கடலுக்குள் செல்ல தடை விதிக்கப் படுகிறது. அதன்படி திருவள்ளூர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி வரை இன்று முதல் ஜூன் 14- ம் தேதி வரை மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
அதாவது, மீன்களின் இனப்பெருக்க காலத்தையொட்டி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்துள்ளது. இதனால், சென்னை – குமரி வரை சுமார் 8 ஆயிரம் விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் கரையில் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில், ரூ.6000 அரசு நிவாரணத்தொகை வழங்கப்படுகிறது. இதற்கிடையில், மீன்பிடி தடைகாலம் துவங்கியதால் மீன்களின் விலை உச்சத்திற்கு செல்லும் என்று கூறப்படுகிறது.