விருதுநகர்:சாத்தூர் அருகே ஏழாயிரம்பண்ணை பகுதியில் அமைந்துள்ள பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.
விருதுநகர் சாத்தூர் அருகே ஏழாயிரம்பண்ணை பகுதியில் மஞ்சள்சோலை ஓடைப்பட்டியில் உள்ள சோலை என்ற பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.மேலும்,வேலை செய்து கொண்டிருந்த 5 பேர் ஆலையில் சிக்கியதாக தகவல் வெளியானது.
இந்த தகவல் அறிந்து,தீயை அணைப்பதற்காக சாத்தூர்,வெம்பக் கோட்டையில் இருந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.இதனைத்தொடர்ந்து,ஆலையில் சிக்கிய 5 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு,சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும்,ஆலையில் மேலும் சிலர் சிக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.இதனையடுத்து,தீயணைப்பு படையினர் தொடர்ந்து மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
ஏற்கனவே,ஜனவரி 1 ஆம் தேதி சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அகமதாபாத் : இன்று ஐபிஎல் 2025 இன் 64வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
கர்நாடகா : மைசூர் சாண்டல் சோப்பின் பிராண்ட் அம்பாசிடராக நடிகை தமன்னாவை கர்நாடக அரசு சார்பில், 2 வருடத்திற்கு ரூ.6.20…
அகமதாபாத் : இன்று ஐபிஎல் 2025 இன் 64வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
டெல்லி : காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவில் உள்ள ஐஎஸ்ஐ முகவர்களைச் சுற்றி விசாரணை தீவிரமாக…
கோயம்புத்தூர் : இன்ஸ்டாகிராமில் பிரபலமான வைஷ்ணவி என்கிற கோவையைச் சேர்ந்த இளம் பெண் தவெகவில் உறுப்பினராக இருந்தவர். அண்மையில், தவெகவில்…
மும்பை : பாலிவுட் நடிகர் சல்மான் கானின் வீட்டிற்குள் அடுத்தடுத்த இரண்டு நபர்கள் நுழைய முயன்றுள்ளனர். சல்மானின் வீட்டிற்கு வெளியே…