கருணாநிதி பற்றிய ஒரு சில நினைவுகள் !ஒரு பார்வை !

Default Image

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருக்குவளை ஊரில் ஜூன் 3-ம் தேதி  1924 -ம் ஆண்டு கருணாநிதி பிறந்தார்.இவரது  தந்தை பெயர் முத்துவேலர். தாயார் அஞ்சுகம் ஆவார்.
கருணாநிதிக்கு இரண்டு சகோதரிகள் இருந்தன.ஒருவர் பெரியநாயகம் , மற்றோருவர் சண்முகசுந்தரம் .

Image result for karunanidhi old photos

பெரியநாயகம் சோகோதரின் மகன் அமிர்தம் ஆவார். சண்முகசுந்தரம் சோகோதரின் மகன்கள் தான் முரசொலி மாறன் , முரசொலி செல்வம் .1938-ம் ஆண்டு  நீதிக்கட்சியின் தலைவர்களின் பிரச்சாரத்தால் ஈர்க்கப்பட்டு மாணவ பருவத்திலேயே அரசியலில் ஈடுபடு ஆரம்பித்து விட்டார்.பின்னர் கருணாநிதி 1941-ம் ஆண்டு  தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம் என்ற அமைப்பை தொடங்கினார்.

Image result for karunanidhi old photos

அடுத்த மூன்று வருடத்தில் அதாவது  1944-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பத்மாவதி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இவர்களின் மகன் தான்  மு.க. முத்து .கருணாநிதி முதல் முதலில் பழனியப்பன் என்னும் நாடகத்தை திருவாரூர் பேபி திரையரங்கில் அரங்கேற்றினர். கருணாநிதி 1947 ம் ஆண்டு முதன் முதலாக ராஜகுமாரி என்ற திரைப்படத்திற்கு வசனம் எழுதினார்.
Image result for karunanidhi old photos
அப்படத்தில் கதாநாயகனாக நடித்தவர் எம் .ஜி ஆர் நடித்து இருந்தார். முதல் மனைவி பத்மாவதி 1948 ஆண்டு இறந்த பிறகு அதே வருடம்   தயாளு அம்மாளை  இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.இவர்களின் பிள்ளைகள் தான்  மு.க. அழகிரி, மு.க. தமிழரசு, மு.க. ஸ்டாலின், செல்வி ஆவார்.
நீதிக்கட்சியின் முக்கிய பதவியில் இருந்த அழகிரிசாமியின் நட்பு கருணாநிதிக்கு  கிடைக்கவே அவர் அரசியல் வர முக்கிய காரணமாக இருந்தது.இதனால் கருணாநிதி தன் மகனுக்கு அழகிரிசாமியின் நினைவாக அழகிரி என பெயர் வைத்தார்.கருணாநிதி 10  சமூக நாவல்களையும் ,6 சரித்திர  நாவல்களையும் எழுதி உள்ளார்.
Image result for karunanidhi old photos
கருணாநிதியை முதல் முறையாக ஆண்டவரே என கூறியவர் எம் .ஜி.ஆர். கருணாநிதி  தான்  எம் .ஜி. ஆருக்கு புரசித்தலைவர் என  பெயர் சூட்டினார். கருணாநிதி  இதுவரை போட்டியிட்ட 13 சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று உள்ளார்.
கருணாநிதி தனது 45 வயதில் தான் தமிழக முதல்வராக பதவியேற்றார். கருணாநிதி ஐந்து முறை  முதல்வராக இருந்து உள்ளார். நடிகர் எம்.ஆர் ராதா தான் கருணாநிதிக்கு முதன் முதலாக  கலைஞர் பட்டம் அளித்தவர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்