கன்னியாகுமரி மாவட்டம், மணவாள புரத்தை சேர்ந்த தம்பதியினர் முத்துராஜ்-ரதி இவர்களுக்கு மூன்று குழந்தை உள்ளனர். அதில் மூன்றாவது குழந்தை ஸ்ரீ ஹரிஷ். இந்த குழந்தைக்கு 2 வயது ஆகிறது. இந்த நிலையில், முத்து ராஜ், அவரது மனைவி மற்றும் அவரது மூன்றாவது குழந்தை மூன்று பேரும் குலசேகரப்பட்டினத்தில் உள்ள முத்தாரம்மன் கோவிலுக்கு மாலை போடுவதாக வேண்டி மாலை அணிவித்து விரதம் இருப்பதற்காக வந்தனர்.
அப்போது சேலத்தை சேர்ந்த பெண் ஒருவர் அவர்களிடம் நன்றாக பேசி பழகி வந்துள்ளார். இந்த நிலையில், ரதியின் கணவர் முத்துராஜ் கடைக்கு சென்று உள்ளார். ரதியும் வேலையாக வெளியில் சென்றுள்ளார். அப்போது ரதியுடன் நன்றாக பேசி அக்குழந்தைக்கு ஐஸ்கிரீம் வாங்கி தருவதாக சேலத்தை சேர்ந்த பெண் திலகாவதி குழந்தையை தூக்கி சென்றுள்ளார்.
ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அந்த பெண் வரவில்லை. இதனையடுத்து சந்தேகம் அடைந்த முத்துராஜ், குழந்தையை தீவிரமாக தேடி வந்துள்ளனர். குழந்தை கிடைக்காததால், குழந்தையின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பெற்றோரின் புகாரை தொடர்ந்து போலீசார் தனிப்படை அமைத்து குழந்தையை தேடி வந்தனர்.
பின் ஒரு பெண் இருசக்கர வாகனத்தில் குழந்தையை கொண்டு சென்றது சிசிடிவி காட்சியில் பதிவாகியிருந்தது. இதனை அடுத்து சேலம் மாவட்டம், ஆத்தூரை சேர்ந்த திலகவதி – பாண்டியன் தம்பதி தான் அந்த குழந்தையை கடத்தி சென்றனர் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் குழந்தையை மீட்பதற்காக சேலத்திற்கு முத்துராஜ்-ரதி தம்பதியை அழைத்துக் கொண்டு சென்றனர். குழந்தையை மீட்டு போலீசார் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். திலகாவதி – பாண்டியனை போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர். அப்போது திலகாவதி மயங்கி விழுந்துள்ளார்.
போலீசார் உடனடியாக திலகாவதியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், பெண் உயிரிழந்த விவகாரத்தில் கோவை ஆலந்துறை காவல்நிலையத்திற்கு நேரில் சென்று நீதிபதி சந்தோஷ் விசாரணை மேற்கொண்டுள்ளார்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…