துணிந்து நின்றும் பணி செய்யலாம் என்பதை நிரூபித்த பெண் ஆளுமை – தமிழிசை
பணிந்து நின்றுதான் பணிசெய்ய வேண்டும் என்பதில்லை, துணிந்து நின்றும் பணி செய்யலாம், என்பதை நிரூபித்த பெண் ஆளுமை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா என தமிழிசை புகழாரம்
இன்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், அதிமுகவினர் ஒவ்வொரு மாவட்டங்களிலும், ஜெயலலிதாவின் படத்துக்கு மரியாதை செலுத்தி இனிப்புகளை வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில், ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், பணிந்து நின்றுதான் பணிசெய்ய வேண்டும் என்பதில்லை, துணிந்து நின்றும் பணி செய்யலாம், என்பதை நிரூபித்த பெண் ஆளுமை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த தினமான இன்று அவரது நினைவை போற்றுகிறேன்’ என பதிவிட்டுள்ளார்.
பணிந்து நின்றுதான் பணிசெய்ய வேண்டும் என்பதில்லை…
துணிந்து நின்றும் பணி செய்யலாம் என்பதனை நிருபித்த பெண் ஆளுமை மரியாதைக்குரிய முன்னாள் முதலமைச்சர் செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்களின் பிறந்த தினமான இன்று அவரது நினைவை போற்றுகிறேன்.#JayalalithaBirthday pic.twitter.com/nJAqxNyveG— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) February 24, 2023