13 வயது சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த தந்தை!திடுக்கிடும் தகவல்!
- தனது வளர்ப்பு மகளான 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை.கைது செய்த காவல்துறையினர்.
- வழக்கு தொடர்ந்ததை அடுத்து நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் நாரிபுரம் கிராமத்தில் சீனப்பா என்பவர் வசித்து வந்துள்ளார்.இவர் செங்கல் சூளையில் பணிபுரிந்து வந்துள்ளார்.மேலும் இவர் 13 வயதான சிறுமி ஒருவரை வளர்த்து வந்துள்ளார்.
அந்த சிறுமி அதே பகுதியில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு வழக்கம் போல் சிறுமி பள்ளிக்கு சென்ற போது மிகவும் சோர்ந்து காணப்பட்டுள்ளார்.
அந்த சிறுமியிடம் ஆசிரியர் ஏன் இவ்வளவு சோர்வா இருக்கிற என்று விசாரித்துள்ளனர். அப்போது அந்த சிறுமி தனது வளர்ப்பு தந்தை பலமுறை தன்னை மிரட்டி பலாத்காரம் செய்ததாகவும் அதற்கு நாகேஷ் என்ற நபர் உடந்தையாக இருந்ததாகவும் கூறியுள்ளார்.
இதனை கேட்ட ஆசிரியர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.இதன் காரணமாக மகளீர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சீனப்பாவையும் அவருக்கு உடந்தையாக இருந்த நாகேசையும் கைது செய்துள்ளனர்.
மேலும் இந்த வழக்கு கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் தொடர்ந்து நடந்து வந்துள்ளது.இந்நிலையில் கடந்த செவ்வாய் கிழமை வழக்கு மீண்டும் அமலுக்கு வந்துள்ளது.பின்னர் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அப்போது தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்ட சீனப்பாவுக்கு போக்சோ உட்பட 35 ஆண்டுகள் சிறை தண்டனையும் 31 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.மேலும் அவருக்கு உடந்தையாக இருந்த நாகேசுக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.