மருமகனை கொன்று வீட்டின் பின்புறம் புதைத்த மாமனார்!
அரியலூர் மாவத்தில் உள்ள ஏலாக்குறிச்சி காட்டூரை சேர்ந்தவர் முனியப்பன்.இவர் தனது தாய் மாமன் மகளான மாரியம்மாள் என்பவரை கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இவர் பொது பணித்துறை அதிகாரியாக பணிபுரிந்து வந்துள்ளார்.இவருக்கு குடி பழக்கம் இருந்து வந்துள்ளது.இதன் காரணமாக அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.இதனால் அவரது மனைவி தனது அம்மா வீட்டில் தங்கி இருந்துள்ளார்.
இந்நிலையில் ஒரு மாதத்திற்கு முன்பு அவரது மனைவியின் அண்ணன் நோய்வாய்ப்பட்டு இறந்துள்ளார்.அதற்கு முனியப்பன் போகாமல் இருந்துள்ளார்.இந்நிலையில் ஜூன் 21-ம் தேதி வழக்கம் போல் குடித்துவிட்டு தனது மாமனாரின் வீட்டிற்கு மனைவியை காண சென்றுள்ளார்.
அப்போது அவரது மனைவி தனது தம்பி இறந்ததுக்கு வராதவாறு இப்போ எதுக்கு வந்திங்க என்று கேட்டுள்ளார்.அப்போது போதையில் இருந்த முனியப்பன் சத்தம் போட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்.
ஏற்கனவே மகனை இழந்த வருத்தத்தில் இருந்த மாமனாரிடமும் கோபத்தில் கத்தியுள்ளார்.இதனால் ஆத்திரம் அடைந்த மாமனார் முனியப்பனின் கழுத்தில் கயிற்றை வைத்து இறுக்கி கொலை செய்துள்ளார்.
பின்னர் முனியப்பன் இறந்ததை அறிந்த அவர்கள் இரவோடு இரவாக வீட்டிற்கு பின்புறம் அவரின் உடலை புதைத்துள்ளனர்.இந்த சம்பவம் காரணமாக தனிப்படை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
பின்னர் அவரின் மாமனாரிடமும் அவரின் மனைவியிடமும் விசாரணை நடத்தியுள்ளனர்.பின்பு அவர்கள் முனியப்பனை கொலை செய்து வீட்டிற்கு பின்புறம் புதைத்தது ஒப்பு கொண்டுள்ளனர்.
மேலும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டாக்டர் உதயபானு தலைமையில் முனியப்பனின் உடலை பிரேத பரிசோதனை செய்த பிறகு அவரின் உடல் சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.
பின்பு இந்த கொலை சம்பவம் காரணமாக முனியப்பனின் மாமனாரையும் அவரின் மனைவியையும் திருவையாறு காவல்துறையினர் நேற்று கைது செய்துள்ளனர்.