பாமக மாநாடு : உழவர்களின் முக்கிய 10 பிரச்சனைகள்… பட்டியலிட்ட ராமதாஸ்! 

இன்று பாஜக சார்பின் நடைபெற்ற உழவர் மாநாட்டில் விவசாயிகள் சந்திக்க கூடிய முக்கிய 10 பிரச்சனைகள் என குறிப்பிட்ட பிரச்சனைகளை டாக்டர் ராமதாஸ் குறிப்பிட்டார்.

PMK Uzhavar maanadu

திருவண்ணாமலை : இன்று (டிசம்பர் 21) பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் திருவண்ணாமலை சந்தைமேடு பகுதியில் ‘உழவர் பேரியக்க மாநாடு’ நடைபெற்றது. இந்த மாநாட்டில் பாஜக நிறுவனர் டாக்டர் ராம்தாஸ், அக்கட்சி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், ஜி.கே.மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டில் பேசிய அன்புமணி ராமதாஸ்,  திமுக அரசு முதலாளிகளின் பக்கம் இருக்கிறது. விளைநிலங்களை அழித்து அறிவுசார் மையங்கள் அமைக்கிறார்கள். விவசாயிகளின் பிரச்சனைகளை புரிந்து கொண்ட ஒரே கட்சி பாமக தான். பரந்தூரில் விமான நிலையம் அமைக்க கூடாது. திருப்போரூரில் தான் விமான நிலையம் அமைக்க வேண்டும். கொடுங்கோல் ஆட்சியில் கூட உழவர்களை கைது செய்து குண்டர் சட்டத்தில் அடைத்ததில்லை. ஆனால், திமுக அரசு அதனை செய்கிறது. எங்களால் விவசாயிகளுக்கு பல்வேறு நன்மைகள் நடந்துள்ளது.” எனத் திமுக அரசு மீது பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்தார்.

அடுத்து பேசிய பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ” உலகிற்கு உணவளிக்கும் உழவர்கள் தான் கடவுள். நான்  என்னை அடிப்படையில் உழவர் என்றே தற்போதும் அறிமுகப்படுத்திக்கொள்வேன். எனக்கூறி, தமிழகத்தில் விவசாயிகள் சந்திக்கும் முக்கிய 10 பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என அவர் குறிப்பிட்டார். அவர் கூறுகையில்,

  1. விவசாயிகள் விளைவிக்கும் விளைபொருட்களுக்கு சந்தையில் உரிய விலை கிடைக்க வழிவகை செய்யாமல் இருக்கிறார்கள்.
  2. விவசாயிகளின் விளை பொருட்கள் அனைத்தும் கொள்முதல் செய்ய முடியாத சூழல் இருக்கிறது.
  3. உழவர்கள் வருமானத்தை அதிகரிக்க அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்கப்படாமால் இருந்து வருகிறது.
  4. உழவர்களுக்கு பாசன வசதி செய்து தரப்படாதது.
  5. வேளாண் துறையில் நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்யப்படாமல் இருத்தல்.
  6. வறட்சியால் விவசாயிகள் பாதிக்கப்படும்போது உரிய இழப்பீட்டை அரசு வழங்கப்படாதது.
  7. வேளாண் சாகுபடிக்கு தேவையான கடன் உரிய நேரத்தில் கிடைக்க பெறாதது.
  8. தொழில்மயமாக்கல் என்ற பெயரில் வேளாண் விளைநிலங்கள் அழிக்கப்படுவது.
  9. தோட்டக்கலை பயிர்கள், மூலிகை பயிர்கள் சாகுபடி பரப்பை அதிகரிக்க செய்யாதிருப்பது.
  10. வேளாண்மை கல்வி, ஆராய்ச்சி கல்வியை அரசு ஊக்குவிக்கப்படாமல் இருப்பது.

என தமிழ்நாட்டில் மேற்கண்ட பிரச்சனைகளை விவசாயிகள் சந்திக்கிறார்கள் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார். மேலும், உலகில் எந்த பொருளை ஒருவர் உருவாக்கினாலும் அதற்கு விலையை அவர் தான் நிர்ணயம் செய்கிறார். ஆனால், வேளாண் விளைபொருட்களுக்கு மட்டும் அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு விவசாயிங்கள் விலை நிர்ணயம் செய்ய முடிவதில்லை. விவசாய விளை பொருட்களை அரசே கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

PahalgamTerroristAttack live
Kashmir Attack
Go tell this to Modi
Sketches of terrorists
Terrorist Attack
j&k terror attack
trapped in Kashmir terror