அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் கொலை வழக்கு.! 8 பேர் உண்மை கண்டறியும் சோதைனைக்கு ஒப்புதல்.!

Default Image

அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் 13 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. இதில் 9 பேர் இன்று நேரில் ஆஜராகி விட்டனர். அதில் 8 பேர் உண்மை கண்டறியும் சோதனைக்கு ஒப்புதல் அளித்துவிட்டனர்.

தமிழக அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி கடத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யபட்டார். இந்த கொலை குற்றவாளிகள் இன்னும் கண்டறியப்படாமல் இருக்கின்றனர். சிறப்பு புலனாய்வு துறையினர் இந்த கொலை வழக்கை விசாரித்து வருகின்றனர். திருச்சி நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடந்து வருகிறது.

கடந்த 1ஆம் தேதி திருச்சி சிறப்பு நீதிமன்றத்தில் உண்மை கண்டறியும் சோதனைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், நவம்பர் 7ஆம் தேதி விசாரணையில் உத்தரவிட்டது போல, இன்று குற்றச்செயல்களில் சம்பந்தப்பட்ட 13 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டு இருந்தது.

மோகன்ராம், தினேஷ், கணேசன், சத்யராஜ், கலைவாணன், மாரிமுத்து, திலீப் எனும் லட்சுமிநாராயணன் , ராஜ்குமார், சுரேந்தர், சண்முகம், சிவா கடலூர், சிறையில் இருக்கும் செந்தில் ஆகிய 13 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.

இதில் 9 பேர் இன்று நேரில் ஆஜராகி விட்டனர். அதில் 8 பேர் உண்மை கண்டறியும் சோதனைக்கு ஒப்புதல் அளித்துவிட்டனர். ஆனால், தங்கள் மருத்துவர் மற்றும் தங்களது வழக்கறிஞர் இந்த சோதனையின் போது இருக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

அந்த 9 பேரில் தென்கோவன் எனும் சண்முகம் மட்டும் ஏற்கனவே தான் போலீசார் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்து விட்டதாகவும், அதனால் இந்த உண்மை கண்டறியும் சோதனையில் கலந்துகொள்ள மறுப்பு தெரிவித்து இருந்தார். மோகன், கணேசன், தினேஷ் , செந்தில் ஆகியோர் நேரில் ஆஜராகவில்லை. அவர்கள் 17ஆம் தேதி ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்