திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டியில் நந்தகுமார் வசித்து வருகிறார்.இவர் அங்கு உள்ள சாலையில் ஹார்டுவேர்ஸ் கடை ஒன்றை நடத்தி வருகிறார்.இவரும் இவர் தாயாரும் 6 மணியளவில் வீட்டை பூட்டிவிட்டு கடைக்கு சென்றுள்ளனர்.
பின்னர் கடையை சுத்தம் செய்துவிட்டு மறுபடியும் 8 மணியளவில் வீட்டிற்கு திரும்பி வந்தபோது வீடு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.பின்பு உள்ளே சென்றபோது ஒருவர் தப்பியோட முயன்றுள்ளார்.
அப்போது தாயார் அவர் கையை பிடித்துக்கொண்டு மகன் நந்தகுமாரை கூப்பிட்டபோது பயந்த நபர் அவரை தள்ளிவிட்டு ஓடியுள்ளார்.அவனை நந்தகுமார் துரத்தி சென்று பிடித்து கம்பத்தில் கட்டிவைத்துள்ளார்.
இதை அறிந்த மக்கள் அந்த நபரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.இதையடுத்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் கட்டிபோடபட்டிருக்கும் நபரை மீட்டு காவல்நிலையத்திற்கு கொண்டுசென்றுள்ளனர்.
பின்பு நந்தகுமார் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் பகுதியை சேர்த்தவர் என்றும் அவர் குடிபோதையில் வீட்டிற்குள் திருட முயன்றதும் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…
சென்னை : குன்றத்தூர் அருகே உள்ள மணஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை…
பாகிஸ்தான் : இன்றயை காலத்தில் சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியீட்டு பலரும் பிரபலமாகி வருகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் எதாவது…