அமைச்சர் பொன்முடி வீட்டில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனையின் போது ஒரு திமுக தொண்டரும் உள்ளே மாட்டிக்கொண்டார்.
இன்று காலை முதல் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீடு அலுவலகம், விழுப்புரத்தில் உள்ள பொன்முடி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.
அப்போது சென்னையில் உள்ள அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை செய்யும் போது அவரது வீட்டிற்கு திமுக தொண்டர் ஒருவர் மனு கொடுக்க வந்துள்ளார். அப்போது அந்த சமயம் அமலாக்கத்துறை சோதனை நடைபெற இருந்ததால் அவரது போனையும் அதிகாரிகள் வாங்கி வைத்துக்கொண்டு வெளியில் அனுப்ப மறுத்துவிட்டனர்.
பின்னர் அவரிடம் செல்போன் கொடுத்து வெளியே அனுப்பியுள்ளனர். அப்போது அந்த திமுக தொண்டர் கூறுகையில், நான் எங்கள் தொகுதியில் உள்ள கல்லூரி விஷயமாக மனு அளிக்க காலை 8 மணிக்கு வந்தேன். அப்போது வந்த அதிகாரிகள் எனது போனை வாங்கி வைத்து கொண்டு வெளியில் அனுப்ப மறுத்து விட்டனர். பின்னர், அவர்கள் சிறுது நேரம் கழித்து போனை கொடுத்து வெளியே அனுப்பிவிட்டனர். பின்னர் நான் அவர்களிடம் என்னிடமும் ஒன்றுமில்லை. இங்கிருந்தும் (அமைச்சர் பொன்முடி வீட்டில்) நீங்கள் கொண்டு செல்வதற்கு எதுவும் இல்லை என கூறிவிட்டு வந்துவிட்டேன் என அந்த திமுக தொண்டர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…
சென்னை : நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக யாரடி நீ மோகினி, நானும் ரவுடி தான், எதிர்நீச்சல் ஆகிய…
ஜான்சி : உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள்…