உருவானது காற்றழுத்த தாழ்வு… தமிழகத்துக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

தெற்கு அந்தமான் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

orange alert

சென்னை :  நேற்று (22-11-2024) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவியது.இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று 23-ஆம் தேதி வாக்கில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த காற்றழுத்த தாழ்வானது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அதற்கடுத்த இரு தினங்களில் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என கூறப்பட்ட நிலையில், தற்போது தெற்கு அந்தமான் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நகர்ந்து நவம்பர் 25 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலத்தில் கவனம் செலுத்தி, அடுத்த 2 நாட்களில் தமிழ்நாடு இலங்கை கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.

இதன் காரணமாக, தமிழ்நாட்டில் வரும் 25 முதல் 28ம் தேதி வரை 4 நாட்கள் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் இதன் காரணமாக ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்படவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Election Result
Wayanad By polls
congress win karnataka 2024
Priyanka Gandhi - Wayanad
Eknath Shinde - Aaditya Thackeray
rain tn
Sorgavaasal Trailer