சட்டம் ஒழுங்கை சீர்குலைப்பதே பாஜகவின் நோக்கம்.! சென்னையில் ஆர்ப்பாட்டம்.! திருமாவளவன் அறிவிப்பு.!
தமிழ்நாட்டில் பாஜகவின் செயல்பாடுகளை எதிர்த்து விசிக தலைமையில் பிப்ரவரி 28ஆம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என திருமாவளவன் அறிவித்துள்ளார்.
நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது அதில் வரும் 28ஆம் தேதி பாஜகவுக்கு எதிராக சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வம்பிழுக்கும் பாஜக : அந்த நிகழ்வில் திருமாவளவன் பேசுகையில், அண்மை காலமாக வன்முறைகளை தூண்டும் தரம்கெட்ட பேச்சுகள், ஆபாசமான விமர்சனங்கள், வீம்புக்கு வம்பிழுக்கும் வீணான அவதூறுகள் மூலம் சமூக அமைதியைக் கெடுப்பதே பாஜகவின் நோக்கமாக இருக்கிறது என குற்றம் சாட்டினார்.
நமது கடமை : மேலும், வட மாநிலங்களில் செய்த அரசியலை போல தமிழ்நாட்டிலும் செய்து தமிழகத்தை ஒரு கலவரபூமியாக மாற்றும் சதித்திட்டத்தோடு பாஜக செயல்படுகிறது சனாதன பயங்கரவாதிகளின் இத்தகைய சதியை முறியடித்து தமிழ்நாட்டில் சமூக அமைதியையும், மத நல்லிணக்கத்தையும் காப்பாற்ற வேண்டியது நமது கடமை ஆகும் எனவும் குறிப்பிட்டார்.
ஆர்ப்பாட்டம் : மேலும், மக்கள் விரோத பாஜக உள்ளிட்ட சனாதன சக்திகளைக் கண்டித்து பிப்ரவரி 28ம் தேதி சென்னையில் ஆர்பாட்டம் நடத்த போவதாகவும் விசிக தலைமைச் நிர்வாகக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
“