வதந்தி பரப்பிய பாஜக நிர்வாகியின் முன்ஜாமீன்.! தமிழகம் செல்ல டெல்லி நீதிமன்றம் உத்தரவு.!

Published by
மணிகண்டன்

வடமாநிலத்தவர் பற்றிய வதந்திகள் பரப்பிய பாஜக நிர்வாகியின் முன் ஜாமீன் மனுவை முடித்து வைத்ததுடெல்லி நீதிமன்றம்.

தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பொய்யான வதந்திகளை சிலர் பரப்பியதால் தமிழகத்தில் ஓர் பதற்றமான சூழ்நிலை உருவானது. இந்த சூழ்நிலையை கட்டுக்குள் கொண்டு வர அரசு பல்வேறு முயற்சிகளை  மேற்கொண்டு வருகிறது. பொய்யான வதந்திகள் பரப்புவோர் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறது.

தூத்துக்குடியில் வழக்குப்பதிவு  : ஏற்கனவே பாஜக தலைவர் அண்ணாமலை மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே போல, வடமாநில தொழிலாளர்கள் இங்கே தாக்கப்பட்டதாக பொய்யான செய்தி பரப்பிய பாஜக நிர்வாகி பிரசாந்த் உம்ரா மீது தூத்துக்குடி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவரை கைது செய்யும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.

முன் ஜாமீன் : இந்நிலையில் இந்த கைது நடவடிக்கையில் தனக்கு முன் ஜாமீன் வழங்குமாறு டெல்லி உயர்நீதிமன்றத்தில் பிரசாந்த் உம்ரா மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார். இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது.

டெல்லி நீதிமன்ற உத்தரவு : அதில், வதந்தி பரப்பியது தொடர்பாக இதுவரையில் பிரசாந்த் உம்ரா மன்னிப்பு கூட கேட்கவில்லை என தமிழக அரசு வாதிட்டது. இருதரப்பு வாதங்களை கேட்டுக்கொண்ட நீதிபதி, இந்த முன்ஜாமீன் மனுவை தமிழகத்தில் உள்ள நீதிமன்றத்திற்கு சென்று தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு பாஜக நிர்வாகியின் முன் ஜாமீன் மனு வழக்கை முடித்து வைத்தது.

Published by
மணிகண்டன்

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

59 mins ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

2 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

3 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

3 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

3 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

4 hours ago