பள்ளி மாணவர்களுக்கு தனி பேருந்து குறித்து முதல்வரிடம் பேசி முடிவெடுக்கப்படும் – அமைச்சர் அன்பில் மகேஷ்
பள்ளி மாணவர்களுக்கு தனியாக பேருந்து இயக்கம் விவகாரம் குறித்து முதல்வரிடம் பேசி முடிவெடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் பள்ளிக்கல்வித்துறையில் சார்பில் மண்டலா அளவிலான மாணவர்களின் நலன் சார்ந்த திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் பொன்முடி, மகேஷ் பொய்யாமொழி கொண்டனர்.
இந்த நிகழ்விற்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, பாலியல் சம்பந்தமான விழிப்புணர்வு குறித்து பாடத்திட்டத்தில் கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மாணவர்கள் அப்பத்தான் வகையில் பேருந்துகளில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்றும், பள்ளி மாணவர்களுக்கு தனியாக பேருந்து இயக்கம் விவகாரம் குறித்து முதல்வரிடம் பேசி முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.