ஒரு பிரியாணிக்காக ரூ.40,000 கொடுத்து ஏமாந்த பெண் !

Default Image

சென்னையில் உள்ள சவுக்கார்பேட்டையை சார்ந்த பிரியா அகர்வால் என்ற மாணவி தான் நண்பர்களுடன் வடபழனி வந்து உள்ளார்.அப்போது தனது செல்போனில் உள்ள  உபேர் ஈட்ஸ் செயலி மூலம் பிரியாணி ஒன்றை ஆர்டர் செய்து உள்ளார். அதற்காக தனது கணக்கில் இருந்து 76 ரூபாய் செலுத்தி உள்ளார்.

பின்னர் செய்து நேரம் கழித்து பிரியா அகர்வால் செல்போனிற்கு ஆர்டர் செய்த பிரியாணி ரத்தாகி விட்டதாக ஒரு குறுஞ்செய்தி ஓன்று வந்தது.ஆனால் பிரியா அகர்வால் செலுத்திய பணம்  திரும்பி வராததால் கூகுளில் உபர் ஈட்ஸ் செயலியின் சேவை மைய எண்ணை தேடியுள்ளார்.

Image result for உபர் ஈட்ஸ்

அப்போது கூகுளில் பதிவாகி இருந்த மோசடி நபர்களின் போலியான சேவை எண் என்பதை  தெரியாமல் பிரியா அகர்வால் தொடர்பு கொண்டு பேசி உள்ளார்.பின்னர் அவர்கள் 76 ரூபாய் சிறிய தொகையாக இருப்பதால் திருப்பி அனுப்புவது சிரமம் எனவே நீங்கள் ஐயாயிரம் ரூபாய் அனுப்பினால் மொத்தமாக அனுப்பி வைக்கிறோம் என கூறி உள்ளனர்.

Related image

அவர்களின் பேச்சை கேட்டு பிரியா அகர்வாலும் கூகுள் பே செயலி மூலம் ஐயாயிரம் ரூபாய் அனுப்பி உள்ளார். ஆனால் பணம் வந்து சேரவில்லை என பிரியா அகர்வால் கூற  தற்போது வரும் ஓடிபி எண்ணை கூறினால் பணம் கணக்கில் வந்து சேரும் என கூற பிரியா அகர்வாலும்  ஓடிபி எண்ணை கூறியுள்ளார்.

மீண்டும் பணம் வரவில்லை என  பிரியா அகர்வால் கூற அந்த மோசடி நபர்கள் மீண்டும் வரும் ஓடிபி எண்ணை கூறினால் பணம் கணக்கில் வந்து சேரும் என கூறி 8 முறை ஓடிபி எண்ணை அனுப்பி உள்ளனர்.

Image result for கூகுள் பே

ஒவ்வொரு முறையும் பிரியா அகர்வால் ஐயாயிரம் அனுப்ப மொத்தமாக 40 ஆயிரம் ரூபாயை அந்த மோசடி நபர் தங்கள் கணக்கில் மாற்றி கொண்டு இணைப்பை துண்டித்து உள்ளனர். பிறகுதான் அகர்வாலுக்கு  தெரிந்தது தான்  பணத்தை கொடுத்து ஏமாந்து விட்டதாக இதை தொடர்ந்து வடபழநி காவல் நிலையத்தில் புகார் கொடுத்து உள்ளார்.அந்த மர்ம நபர்களை பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்