95 Year Old WomanBharatanatyam [file image]
தமிழ்நாடு : திறமைக்கு வயது இல்லை என்பதற்கு உதாரணம் வயதானவர்கள் செய்யும் விஷயங்களை பார்த்து நாம் கற்றுக்கொண்டு இப்போம். வயதான பெரியவர்கள் பலரும் தங்களுடைய திறமைகளை வயதாகியும் நம்மளிடம் காட்டி நம்மளை ஆச்சரியத்தில் ஆழ்த்திவிடுவார்கள். அப்படி தான் தமிழ்நாட்டைச் சேர்ந்த 95 வயது மூதாட்டி அழகாக பரத நாட்டியம் ஆடி அனைவரையும் கவர்ந்துள்ளார்.
ஓ ரசிக்கும் சீமானே என்ற பழைய தமிழ் பாடலுக்கு அழகாக நடனம் ஆடும் பாட்டியின் அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. அந்த அழகான வீடியோ ஒரு லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளையும் ஐந்தாயிரம் லைக்குகளையும் பெற்றுள்ளது.
95 வயதான இந்த பெண் வயதானவர்களுக்கான விஸ்ராந்தி இல்லத்தில், ஒரு நிகழ்ச்சி நடந்தபோது, அனைவரையும் கவரக்கூடிய வகையில் தனது திறமையை வெளிக்காட்டினார். இப்படி பட்ட திறமையை வைத்து இருக்கும் இந்த பெண் கண்டிப்பாக இளமையாக இருந்த சமயத்தில் பெரிய நடன கலைஞராக இருந்திருப்பாரோ என நீங்கள் யோசிப்பது புரிகிறது.
நீங்கள் நினைத்தது சரி தான் இந்த பெண் 1940-களில் கலாக்ஷேத்ரா அறக்கட்டளையின் மாணவியாக இருந்ததாகவும், சந்திரலேகா போன்ற திரைப்படங்களில் நடனமாடியதாகவும் கூறப்படுகிறது. இவர் நடனடமாடிய வீடியோவை பார்த்த பலரும் ஆச்சரியத்தில் கை தட்டி வருகிறார்கள்.
மேலும், சிலர் ஆரோக்கியமாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதோடு நடனமாடவும் முடியும் என்பதை இந்த சக்தி வாய்ந்த பாட்டி காமித்துவிட்டார் எனவும் , முற்றிலும் ஆச்சரியமாக இருக்கிறது. இளமை இன்னும் அப்படியே இருக்கிறது. கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும்” எனவும் கூறி வருகிறார்கள்.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…