95 வயதில் இப்படி ஒரு நடனமா? பரதநாட்டியத்தில் பின்னி எடுத்த பாட்டி..வைரலாகும் வீடியோ!!

95 Year Old WomanBharatanatyam

தமிழ்நாடு :  திறமைக்கு வயது இல்லை என்பதற்கு உதாரணம் வயதானவர்கள் செய்யும் விஷயங்களை பார்த்து நாம் கற்றுக்கொண்டு இப்போம். வயதான பெரியவர்கள் பலரும் தங்களுடைய திறமைகளை வயதாகியும் நம்மளிடம் காட்டி நம்மளை ஆச்சரியத்தில் ஆழ்த்திவிடுவார்கள். அப்படி தான் தமிழ்நாட்டைச் சேர்ந்த 95 வயது மூதாட்டி அழகாக பரத நாட்டியம் ஆடி அனைவரையும் கவர்ந்துள்ளார்.

ஓ ரசிக்கும் சீமானே என்ற பழைய தமிழ் பாடலுக்கு அழகாக நடனம் ஆடும் பாட்டியின் அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. அந்த அழகான வீடியோ ஒரு லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளையும் ஐந்தாயிரம் லைக்குகளையும் பெற்றுள்ளது.

95 வயதான இந்த பெண் வயதானவர்களுக்கான விஸ்ராந்தி இல்லத்தில், ஒரு நிகழ்ச்சி நடந்தபோது, அனைவரையும் கவரக்கூடிய வகையில் தனது திறமையை வெளிக்காட்டினார். இப்படி பட்ட திறமையை வைத்து இருக்கும் இந்த பெண் கண்டிப்பாக இளமையாக இருந்த சமயத்தில் பெரிய நடன கலைஞராக இருந்திருப்பாரோ என நீங்கள் யோசிப்பது புரிகிறது.

நீங்கள் நினைத்தது சரி தான் இந்த பெண் 1940-களில் கலாக்ஷேத்ரா அறக்கட்டளையின் மாணவியாக இருந்ததாகவும், சந்திரலேகா போன்ற திரைப்படங்களில் நடனமாடியதாகவும் கூறப்படுகிறது. இவர் நடனடமாடிய வீடியோவை பார்த்த பலரும் ஆச்சரியத்தில் கை தட்டி வருகிறார்கள்.

மேலும், சிலர் ஆரோக்கியமாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதோடு நடனமாடவும் முடியும் என்பதை இந்த சக்தி வாய்ந்த பாட்டி காமித்துவிட்டார் எனவும் , முற்றிலும் ஆச்சரியமாக இருக்கிறது. இளமை இன்னும் அப்படியே இருக்கிறது. கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும்” எனவும் கூறி வருகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news 2
IND vs ENG 2nd ODI cricket match
V. C. Chandhirakumar win
rohit sharma Kevin Pietersen
narendra modi HAPPY
V. C. Chandhirakumar