திருப்பூர் பின்னலாடை கம்பெனிகளில் வேலைக்குச் சேர ஆட்கள் கிடைப்பதில்லை என நிறுவனத்தின் உரிமையாளர்கள் புலம்பி வருகின்றனர். அப்படியே வேலைக்கு சேர்ந்தாலும் ஒரு சில நாட்களில் வேலையை விட்டு சென்று விடுவதாகவும், அதிக சம்பளம் கொடுத்தும் வேலைக்கு ஆள் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் திருப்பூரில் உள்ள ஒரு பின்னலாடை கம்பெனியின் போதிய ஆட்கள் இல்லாததால் உற்பத்தி பாதிக்கப்பட்டு ஏற்றுமதி கணிசமாக குறைந்து வருகிறது. அதனால் அந்நிறுவனத்தின் உரிமையாளர் ஒரு வித்தியாசமான முறையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பின்னர் அந்த அறிவிப்பில் வேலைக்கு சேரும் ஒவ்வொருவருக்கும் சம்பளத்துடன் மதியம் ஒரு கட்டிங் மற்றும் இரவு ஒரு குவாட்டர் வழங்கப்படும் என்றும், அது போக டீ செலவுக்கு காசும், வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இதனை அவர் ஒரு வால்போஸ்டர் போல் ஒட்டி தனது நிறுவனத்தின் முன் வைத்துள்ளார். இந்த விளம்பரம் வெளியான ஒரு சில மணி நேரங்களில் அந்த கம்பெனிக்கு தேவையான அனைத்து வேலை ஆட்களும் கிடைத்து விட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து, வேலைக்கு ஆள் கிடைக்காமல் தவிக்கும் மற்ற நிறுவனங்களும் இதே முறையை பின்பற்ற முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து பலவிதமாக ஆட்கள் தேடிய நிலையில் யாரும் வரவில்லை எனவும், இந்த சுவரொட்டி விளம்பரம் ஒட்டிய சில மணி நேரங்களில் ஆட்கள் வந்துவிட்டதாகவும், நிறுவனத்தின் உரிமையாளர் பெருமிதம் தெரிவித்துள்ளார். தற்பொழுது இந்த சுவரொட்டி விளம்பரங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சென்னை : அடுத்த ஆண்டு 2025 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 10 ஆம் தேதி விடாமுயற்சி திரைப்படம் வெளியாகும்…
சென்னை: இயக்குநர் செல்வராகவன் தனது மெகா ஹிட் படமான "7ஜி ரெயின்போ காலனி" படத்தின் அடுத்த பாகத்தின் போஸ்டரை புத்தாண்டை…
சென்னை: இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நாயகன் ராம்சரண், கியாரா அத்வானி உள்ளிட்டோர் நடித்துள்ள ‘கேம் சேஞ்சர்’ படத்தின் ட்ரெய்லர், நாளை…
சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல…
உடுமல்பேட்டை : பழனி ரோடு, தங்கமாலூடை, ராகல்பாவி, சுண்டகன்பாளையம், ஆர் வாலூர், கணபதிபாளையம், வானுசுபட்டி, ஏரிபாளையம், புக்களம், குறிஞ்சரி, சீனவரன்பட்டி,…
மதுரை : தமிழக அரசு, இந்த முறை பொங்கல் சிறப்பு பரிசாக ஒரு முழு கரும்பு, ஒரு கிலோ பச்சரிசி,…