நடிகர் தனுஷ் வழக்கு – இன்று வெளியாகும் தீர்ப்பு…!

நடிகர் தனுஷ் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்திருந்த சொகுசு காருக்கான வரிவிலக்கு வழக்கில் இன்று நீதிமன்ற உத்தரவு வெளியாகவுள்ளது.
நடிகர் தனுஷ் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளிநாட்டு சொகுசு கார் ஒன்றை இறக்குமதி செய்தார்.இதற்கு வரியாக 60.66 லட்சம் செலுத்த வேண்டும் என்று வணிகவரித் துறை உத்தரவிட்டது. இதை எதிர்த்தும், வரி விலக்கு கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் தனுஷ் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், நடிகர் தனுஷ் 50 சதவீதம் வரி செலுத்தினால் மட்டுமே அவரது காரை பதிவு செய்ய வேண்டும் என்று கடந்த 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆர்.டி.ஓ அலுவலகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து, நீதிமன்றத்தின் உத்தரவுப்படி ரூ. 3.33 லட்சத்தை வரியாக நடிகர் தனுஷ் செலுத்தியதால், விதிமுறைகளை பின்பற்றி காரை பதிவு செய்ய ஆர்.டி.ஓ அலுவலகத்திற்கு 2016-ம் ஆண்டு ஏப்ரலில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது தனுஷ் சார்பாக வழக்கறிஞர் ஆஜராகவில்லை.இதனால்,வழக்கு இன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது.மேலும்,இந்த வழக்கு தொடர்பாக இன்று உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் அவர்கள் உத்தரவு பிறப்பிக்க உள்ளார். ஏற்கனவே நடிகர் விஜய் அவர்கள் வெளிநாட்டு சொகுசு காருக்கு வரி விலக்கு கோரிய வழக்குக்கும் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் அவர்கள் தான் உத்தரவு பிறப்பித்திருந்தார் என்பதால்,நடிகர் தனுஷுக்கு வழங்கப்படும் தீர்ப்பு குறித்து எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சீமான் விவகாரம் முதல்… மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் வரை.!
February 28, 2025
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025
“விருப்பமில்லாமல் செய்தால் தான் அது பாலியல் வன்கொடுமை” சீமான் மீண்டும் சர்ச்சை பேச்சு!
February 28, 2025