கும்பகோணத்தில் சாலை மறியல்.! இரவோடு இரவாக நீதிமன்ற காவலில் சிறைக்கு சென்ற பாஜக நிர்வாகிகள்.!
கும்பகோணத்தில் சாலை மறியலில் ஈடுபட்டதால் பாஜக நிர்வாகிகளுக்கு நீதிமன்ற காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கும்பகோணம் அருகே சாக்கோட்டையில் செயல்பட்டு வரும் ஓர் தனியார் பள்ளியில் பாதை தொடர்பாக பாஜகவினர் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். அந்த பள்ளிக்கான பாதை குறுகலாக இருப்பதால் விபத்துக்கள் ஏற்படுவதாக குற்றம் சாட்டி மாற்று பாதை ஏற்பாடு செய்துதர கோரிக்கை விடுத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த சாலை மறியல் காரணமாக சாக்கோட்டை அருகே மிகப்பெரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட பாஜகவினர் மீது காவல்துறையினர் கைது நடவடிக்கை மேற்கொண்டனர்.
இந்த கைது நடவடிக்கையை தொடர்ந்து நேற்று இரவு பாஜக மாவட்ட தலைவர் சதீஷ் மற்றும் மாவட்ட செயலாளர் பசுபதி பாண்டியன் உள்ளிட்ட 8 பாஜக நிர்வாகிகள் மீது நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து நேற்று இரவு நீதிபதி முன் ஆச்சரியப்படுத்தப்பட்டனர். அதன் பிறகு அவர்கள் எட்டு பேருக்கும் ஜூலை 11 வரை புதுக்கோட்டை மாவட்ட கிளை சிறையில் நீதிமன்றக் காலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து அவர்கள் புதுக்கோட்டை கிளை சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த கைது நடவடிக்கை கண்டித்து இன்று மதியம் பாஜகவினர் கும்பகோணத்தின் ஆர்ப்பாட்டம் நடத்தபோவவதாக அறிவித்துள்ளனர்.