jegan [Imagesource : Fileimage]
திருச்சிமாவட்டம் திருவெறும்பூர் பகுதியை சேர்ந்தவர் ரவுடி கொம்பன் ஜெகன். இவர் மீது 26 மாவட்டங்களில், 11 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், ஜெகனை பிடிப்பதற்காக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாரின் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படை போலீசார் ரவுடி ஜெகனை தேடி வந்தனர். இதனையடுத்து, ரவுடி ஜெகன் சனமங்கலம் வனப்பகுதியில் பதுங்கி இருப்பதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில், ஜெகனை பிடிப்பதற்காக போலீசார் சென்றுள்ளனர்.
திருச்சியில் பிரபல ரவுடி கொம்பன் ஜெகன் என்கவுண்டரில் சுட்டுக் கொலை..!
போலீசார் சனமங்கலம் பகுதியை அடைந்த போது, போலீசாரை பார்த்தவுடன் அவர் தப்ப முயன்றுள்ளார். அவரை விரட்டி பிடிக்க முயன்ற போது, உதவி ஆய்வாளர் வினோத்தை ஜெகன் தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் அவர் படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து ரவுடி ஜெகன் மீது போலீசார் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் ரவுடி ஜெகன் மீது 2 இடங்களில் துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது. இதனால், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, என்கவுண்டர் நடத்தப்பட்ட இடத்தில், டி.ஐ.ஜி பகலவன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில், நாட்டு துப்பாக்கி, நாட்டு வெடிகுண்டு உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை : தமிழகம் வெற்றிக் கழகம் கட்சி ஆரம்பித்து தற்போது வரையில் அக்கட்சி நிர்வாகத்திற்கு 120 மாவட்ட செயலாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்…
சென்னை : இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 'ட்ராகன்' படத்தின் டிரெய்லர் வெளியானது. இப்படத்தில் கயாடு…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்பு பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் தொடர் இப்பொது பரபரப்பான கட்டத்தில் உள்ளது.…
ஒடிசா : இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டியின் போ, ஏற்பட்ட ஃப்ளட்லைட் பிரச்சனை தொடர்பாக ஒடிசா அரசு…
மதுரை : மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரையில் உள்ள அரசு நூற்றாண்டு ஏறு தழுவுதல் மைதானத்தில் நாளை…
சென்னை : ஆல்பம் பாடல்களுக்கு இசையமைத்து கலக்கி கொண்டு இருந்த பாடகர் திப்புவின் மகனான சாய் அபியங்கர் காட்டில் மழை…