நாளை பிற்பகல் 3 மணி முதல் 11- ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடைத்தாள் நகல் வழங்கப்படும் என்று மாநில கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 4-ம் தேதி தொடங்கி, 26ம் தேதி வரை பிளஸ் 1 தேர்வுகள் நடந்தது. இதில், 8 லட்சத்து 32 ஆயிரத்து 475 பேர் தேர்வு எழுதினர். இதற்கான முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான முடிவுகள் கடந்த ஜூலை மாதம் 31 ஆம் தேதி வெளியிடப்பட்டது. விடைத்தாள் நகல் வழங்குவது மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என மாநில கல்வித்துறை தெரிவித்தது.
இந்நிலையில், நாளை பிற்பகல் 3 மணி முதல் 11- ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடைத்தாள் நகல் வழங்கப்படும் என்று மாநில கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், +1 விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பித்தவர்கள் நாளை பிற்பகல் 3 மணி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளது. விண்ணப்பித்த மாணவர்கள் http://dge.tn.gov.in/ என்ற இணையத்தளத்தில் பதிவெண், பிறந்த தேதியை பதிவு செய்து பதிவிறக்கம் செய்யலாம்.
மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அதற்குரிய விண்ணப்பத்தினையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. மேலும், விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 2ஆம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும். முன்னதாக 11 ஆம் வகுப்பு இறுதி தேர்வு ஒன்று கொரோனாவால் ரத்து செய்யப்பட்டு, காலாண்டு, அரையாண்டு மற்றும் வருகைப்பதிவு அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியாகியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
கேரளா : ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து, அதன் ஒவ்வொரு அப்டேட்டையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். தற்போது,…
வாட்டிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் கத்தோலிக்க திருச்சபை போப் பிரான்சிஸ், தனது 88வது வயதில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது…
சென்னை : டாஸ்மாக்கில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ரூ.2,000 ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் செந்தில் பாலாஜி…
சென்னை : இந்தியாவில் IAS, IPS, IFS, IRS ஆகிய சிவில் சர்வீஸ் காலிப்பணியிடங்களுக்கான தேர்வுகள் கடந்த 2024 ஜூன்…
சென்னை : சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு…
உதகை : ஊட்டியில் ஆளுநர் கூட்டும் துணைவேந்தர்கள் கூட்டம் ஏப்ரல் 25,26 தேதிகளில் நடைபெறும் பல்கலைக்கழகங்களின் வேந்தர் என குறிப்பிட்டு…