#Breaking : கோவை கார் வெடிப்பு : தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை.!

Published by
மணிகண்டன்

கோவை கார் வெடிவிபத்து, தமிழகத்தில் சட்ட ஒழுங்கு நிலை குறித்தும் தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் , டிஜிபி சைலேந்திர பாபு, தலைமை செயலர் இறையன்பு, உளவுத்துறை முக்கிய அதிகாரி, உள்துறை அதிகாரிகள் உடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. 

கடந்த 23ஆம் தேதி அதிகாலை 4 மணி அளவில் கோவை உக்கடம் அருகே கோட்டைமேடு பகுதியில் காரில் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காரில் இருந்த ஜமேஷ் முபின் உடல் கருகி உயிரிழந்தார்.

இந்த கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழக அரசு ஜமேஷ் முபினுக்கு உதவி செய்த 5 பேரை உபா சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும், கோவையில் தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ அதிகாரிகள் தனி தனி குழுக்களாக பல்வேறு இடங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலகத்தில் டிஜிபி சைலேந்திர பாபு, தமிழக தலைமைசெயலர் இறையன்பு  மத்திய உள்துறை செயலர் பணீந்திர ரெட்டி, ஏடிஜிபி டேவிட்சன் தேவர்சிவாதம், உளவுத்துறை அதிகாரி  ஆகியோர் உடன் ஆலோசனை நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் கோவை கார் வெடிவிபத்து தொடர்பாகவும், தமிழகத்தில் தற்போதைய சட்ட ஒழுங்கு நிலை குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Recent Posts

1 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

1 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரம் அதாவது மதியம் 1 மணி வரை பல மாவட்டங்களில் லேசான…

1 minute ago

தொடர்ந்து உயரும் தங்கம் விலை…இன்றைய விலையை கேட்டு ஷாக்கான இல்லத்தரசிகள்!

சென்னை :  தங்கம் விலையானது கடந்த சில நாட்களாகவே ஏற்றத்தை கண்டு வருவதால் நகை வாங்கும் நகை பிரியர்கள் சற்று…

11 minutes ago

INDvAUS: அபார பந்து வீச்சில் சுருண்ட ஆஸ்திரேலியா! முதல் இன்னிங்ஸ்ல் இந்தியா 46 ரன்கள் முன்னிலை!

பெர்த் : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிக்கொள்ளும் பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நேற்று பெர்த் மைதானத்தில் …

1 hour ago

சுடச்சுட ரெடியாகும் ‘குட் பேட் அக்லி’… வெளிவந்தது அசத்தலான அப்டேட்!

சென்னை : ஒரே நேரத்தில் 2 படங்களில் நடித்து வருவதுடன், கார் ரேஸிலும் பங்கேற்று வருகிறார் அஜித் குமார். மகிழ்…

1 hour ago

முன்னிலையில் பாஜக! பின்தொடரும் காங்கிரஸ்! தேர்தல் நிலவரம் இதோ…

டெல்லி : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…

1 hour ago

உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி! தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு கணிப்பு!

சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நேற்று (22-11-2024) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…

2 hours ago