புதிய தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையர்.! தலைமை செயலர் இறையன்புக்கு வாய்ப்பு இருக்குமா.? முதல்வர் ஆலோசனை.!
தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையர் பொறுப்புக்கு தகுதியானவைகளை நியமிக்க முதல்வர் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு தலைமை செயலர் பதவிக்கு அடுத்தபடியாக பார்க்கப்படும் தலைமை தகவல் ஆணையர் பொறுப்பில் இருந்த ராஜகோபால் ஐஏஎஸ் அவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஓய்வு பெற்றார்.
ஆலோசனை கூட்டம் : இதனை தொடர்ந்து கடந்த சில மாதங்களாக காலியாக இருக்கும் தலைமை தகவல் ஆணையர் மற்றும் 4 தகவல் ஆணையர் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை நியமிக்க ஆலோசனை கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகிறது.
இறையன்பு ஐஏஎஸ் : இதில் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் , தலைமை செயலர் இறையன்பு ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். இதில் தலைமை தகவல் ஆணையர் பொறுப்புக்கு தலைமை செயலர் பொறுப்பில் இருந்து விருப்ப ஓய்வு பெற உள்ள இறையன்பு ஐஏஎஸ் அவர்களும் விண்ணப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்து.
விரைவில் அறிவிப்பு : இந்த ஆலோசனை கூட்டம் முடிந்து இன்று மாலை அல்லது நாளை காலை தமிழ்நாட்டின் புதிய தலைமை தகவல் ஆணையர் மற்றும் 4 தகவல் ஆணையர்கள் யார் என்பதை தமிழக அரசு அறிவிக்கும் என கூறபடுகிறது.