பத்ம சேஷாத்ரி பள்ளியைத் தொடர்ந்து,சென்னை மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் ஆனந்த் மீது பாலியல் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள பத்ம சேஷாத்ரி பள்ளியில் வணிகவியல் பாட ஆசிரியராக பணியாற்றியவர் ராஜகோபாலன்.இவர் அங்கு பயின்ற பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும்,ஆன்லைன் வகுப்புகளில் அரைகுறை ஆடையுடன் வருவதாகவும் எழுந்த புகாரை அடுத்து அவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டார்.இதனையடுத்து, ராஜகோபாலனை ஜூன் 8 ஆம் தேதி வரை,14 நாட்கள் புழல் சிறையில் அடைக்குமாறு சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில்,பத்ம சேஷாத்ரி பள்ளியை தொடர்ந்து,சென்னை சேத்துப்பட்டில் உள்ள மகிரிஷி வித்யா மந்திர் பள்ளியின் வணிகவியல் துறை ஆசிரியர் ஆனந்த் மீது எழுந்துள்ள பாலியல் புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகிரிஷி வித்யா மந்திரின்,சிபிஎஸ்இ பள்ளியில் பணியாற்றிய ஆனந்த் தற்போது அதே பள்ளியின் மெட்ரிக் பள்ளியில் பணியாற்றி வருகிறார்.இவர் மீது முன்னாள் மாணவி ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.
இந்த புகாரைப் பற்றிய தகவலை மற்றொரு மாணவி,ஆனந்துக்கு அனுப்பி இது நீங்கள் தானா? என்று வாட்ஸ்-அப்பில் கேட்டுள்ளார்.ஆனால்,இதற்கு மறுப்பு தெரிவித்த அவர்,”இந்த செய்தியை நீங்கள் நம்புகிறீர்களா?,உங்கள் அனைவருக்கும் என்னைப் பற்றி தெரியும்,அதிலும் குறிப்பாக என்னிடம் வணிகவியல் பாடம் படிக்கும் மாணவர்களுக்கு நன்றாகவே தெரியும்.
மேலும்,என் அன்பான மகளே,எனது பணியில் நான் எவ்வளவு அர்பணிப்புடன் இருக்கிறேன் என்று கடவுளுக்கும் தெரியும்.நான் அப்படிப்பட்ட ஆள் இல்லை,நான் கொஞ்சம் ஸ்ட்ரிக்ட் ஆக இருப்பேன்.என் மாணவர்களை நான் எப்போதும் பாதுகாப்பேன்.
இந்த காரியத்தை யார் செய்தார்கள் என்று எனக்கு தெரியாது.ஆனால்,கண்டிப்பாக என்னிடம் படித்த மாணவர்களாக இருக்க மாட்டார்கள்”,என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்த மாணவி,”மாணவர்கள் மீது அக்கறை என்ற பெயரில் நீங்கள் தவறு செய்துள்ளீர்கள்.அதை உங்கள் மாணவர்கள் அனைவரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.இதற்கு நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள்?,இந்த வெட்கக்கேடான செயலை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா?”,என்று கேட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து,இந்த இருவரின் வாட்ஸ்-அப் உரையாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மகாராஷ்டிரா : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை பெரியார் குறித்து தொடர்ச்சியாக விமர்சித்து பேசி வருகிறார். இதன் காரணமாக…
சென்னை : இன்று நடிகர் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் படங்களின் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளியாகி கொண்டு இருக்கிறது.…
துபாய் : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025-க்கான கிரிக்கெட் போட்டிகள் வரும் பிப்ரவரி 19 முதல் தொடங்கி மார்ச் 9ஆம்…
ஈரோடு : கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திமுக,…
டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் ஒவ்வொரு கட்சி நாடாளுமன்ற குழு தலைவரும் பட்ஜெட்…