நயன்தாரா விக்னேஷ் சிவன் தவறான முன் உதாரணமாக இருக்கின்றனர். செயற்கை கருத்தரிப்பு மூலம் குழந்தை பெற்றது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வழக்கறிஞர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
நட்சத்திர தம்பதிகளாக நடிகை நயன்தரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோர் கடந்த ஜூன் 9ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். அடுத்த 4 மாதங்களில் சரியாக அக்டோபர் 9ஆம் தேதி தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்ததாக அறிவித்தனர்.
திருமணம் ஆன 4 மாதங்களில் குழந்தை பெற்ற விவகாரம் பெரும் சர்ச்சைக்கு உள்ளது. இவர்கள் எப்படி குழந்தை பெற்றார்கள். செயற்கை முறையில் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டாலும், விதிகளை மீறி குழந்தை பெற்றுள்ளனர் என பல்வேறு குற்றசாட்டுகள் எழுந்துள்ளன. தமிழக மருத்துவத்துறை சார்பில் சிறப்பு விசாரணை குழு அமைத்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளது.
இந்நிலையில், தற்போது இந்த பிரச்சனை தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் வழக்கறிஞர் கே.எல்.சார்லஸ் அலெக்ஸாண்டர் என்பவர் புகார் அளித்துள்ளார்.
சமுதாயத்தில் நல்ல நிலையில் இருக்கும் நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியினர் மத்திய மாநில அரசுகள் வகுத்துள்ள சட்ட விதிகளை பின்பற்றாமல் செயற்கை கருத்தரிப்பு மூலம் குழந்தை பெற்றுள்ளார்கள். இது தவறான முன் உதாரணம் ஆகும். இது சமூகத்தை சீர்கெடுக்கும் செயல் ஆகும்.
குறிப்பிட்டுள்ள சட்ட விதிகளுக்கு உட்பட்டு தான் செயற்கை கருத்தரிப்பு நடைபெற்றதா என்பதை விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகியோர் சமூக பொறுப்புடன் விளக்கமளிக்க வேண்டும். எனவும் , விளக்கம் தராமல் இருப்பது சட்டத்தை மீறிய செயல் ஆகும் எனவும் புகாரில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சட்ட விதிகளை மீற துணை நின்ற அனைவரது மீதும் காவல் துறையினர் தகுந்த நடவடிக்க எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் கே.எல்.சார்லஸ் அலெக்ஸாண்டர் கொடுத்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மகாராஷ்டிரா : நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…
புது டெல்லி : மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது வலுவடைந்துள்ளது.மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…