வாடகைத் தாய் விவகாரம்.! நயன்தாரா – விக்னேஷ் சிவன் மீது வழக்கறிகஞர் புகார்.!

Default Image

நயன்தாரா விக்னேஷ் சிவன் தவறான முன் உதாரணமாக இருக்கின்றனர். செயற்கை கருத்தரிப்பு மூலம் குழந்தை பெற்றது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வழக்கறிஞர் ஒருவர் புகார் அளித்துள்ளார். 

நட்சத்திர தம்பதிகளாக நடிகை நயன்தரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோர் கடந்த ஜூன் 9ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். அடுத்த 4 மாதங்களில் சரியாக அக்டோபர் 9ஆம் தேதி தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்ததாக அறிவித்தனர்.

திருமணம் ஆன 4 மாதங்களில் குழந்தை பெற்ற விவகாரம் பெரும் சர்ச்சைக்கு உள்ளது. இவர்கள் எப்படி குழந்தை பெற்றார்கள். செயற்கை முறையில் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டாலும், விதிகளை மீறி குழந்தை பெற்றுள்ளனர் என பல்வேறு குற்றசாட்டுகள் எழுந்துள்ளன.  தமிழக மருத்துவத்துறை சார்பில் சிறப்பு விசாரணை குழு அமைத்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளது.

இந்நிலையில், தற்போது இந்த பிரச்சனை தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் வழக்கறிஞர் கே.எல்.சார்லஸ் அலெக்ஸாண்டர் என்பவர் புகார் அளித்துள்ளார்.

சமுதாயத்தில் நல்ல நிலையில் இருக்கும் நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியினர் மத்திய மாநில அரசுகள் வகுத்துள்ள சட்ட விதிகளை பின்பற்றாமல் செயற்கை கருத்தரிப்பு மூலம் குழந்தை பெற்றுள்ளார்கள். இது தவறான முன் உதாரணம் ஆகும். இது சமூகத்தை சீர்கெடுக்கும் செயல் ஆகும்.

குறிப்பிட்டுள்ள சட்ட விதிகளுக்கு உட்பட்டு தான் செயற்கை கருத்தரிப்பு நடைபெற்றதா என்பதை விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகியோர் சமூக பொறுப்புடன் விளக்கமளிக்க வேண்டும். எனவும் , விளக்கம் தராமல் இருப்பது சட்டத்தை மீறிய செயல் ஆகும் எனவும் புகாரில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த சட்ட விதிகளை மீற துணை நின்ற அனைவரது மீதும் காவல் துறையினர்  தகுந்த நடவடிக்க எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் கே.எல்.சார்லஸ் அலெக்ஸாண்டர் கொடுத்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்