வேளாண் சட்ட திருத்த மசோதாவில் உள்ள சாதக பாதகங்களை ஆராய குழுவை அமைக்க வேண்டும் – விஜயகாந்த்

Default Image

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள வேளாண் சட்ட திருத்த மசோதாவில் உள்ள சாதக பாதகங்களை ஆராய விவசாய அமைப்புக்கள் அடங்கிய குழுவை தமிழக அரசு அமைக்க வேண்டும் என விஜயகாந்த்  தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள வேளாண் சட்ட திருத்த மசோதாவில் உள்ள சாதக பாதகங்களை ஆராய விவசாய அமைப்புக்கள் அடங்கிய குழுவை தமிழக அரசு அமைக்க வலியுறுத்தி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

வேளாண் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட நிலையில், இந்த சட்டத்தால் ஏற்படும் சாதக பாதகங்களை தெளிவாக ஆராய மத்திய மாநில அரசுகள் குழு அமைத்து, அந்த சட்டத்தால் மக்களுக்கு என்ன பலன் ,என்ன நன்மை, என்ன தீமை என்பதை தெளிவுபடுத்த வேண்டும் அனைவருக்கும் புரியும் வண்ணம் தெளிவுபடுத்த வேண்டும்.

மேலும், விவசாய பெருமக்களுக்கு அனைத்து வகையிலும் பயனளிக்கும் வகையில் அமைந்தால் வேளாண் சட்ட வரவேற்கும் என்றும் எந்த விதத்திலாவது மசோதாவை தேமுதிக ஒரு சிறிய பாதிப்பு இருக்குமேயாலும் கூட அதனை தேமுதிக வரவேற்காது. மேலும், புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு, வேளாண் சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு என அனைத்திற்கும் எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், உண்மை நிலை என்ன என்பதை மக்களுக்கு புரிய வைக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை. இல்லையென்றால் எது உண்மை எது பொய் என்பது மக்களுக்கு புரியாமலேயே போய்விடும்.

எனவே தமிழக அரசு இதில் உடல் யாக கவனம் செலுத்தி, புதிய கல்விக்கொள்கையில் உள்ள சாதக பாதகங்களை ஆராய வல்லுநர்கள் அடங்கிய ஒரு குழுவையும், அதேபோல், வேளாண் சட்டத்தில் உள்ள நிறைகுறைகளை ஆராய விவசாய அமைப்புகள் அடங்கிய குழு ஒன்றையும் அமைத்து,  இதில் உள்ள சாதக பாதகங்களை ஆராய்ந்து மக்களுக்க தெளிவு படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்