காஞ்சிபுரத்தில் கத்தி முனையில் கல்லூரி பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை.! 4 பேர் தப்பியோட்டம்.!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கல்லூரி பெண்ணை 4 பேர் கத்தி முனையில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏனாத்தூர் எனும் ஊர் அருகே குண்டு குளம் எனும் பகுதியில் ஒரு தனியார் கல்லூரி மாணவி தனது ஆண் நண்பருடன் சென்றுள்ளார்.
அப்போது அந்த பகுதியில் இருந்த 4 நபர்கள் , வந்திருந்த இருவரையும் கத்தி முனையில் மிரட்டி, அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட அந்த கல்லூரி பெண் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். தற்போது இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.