சென்னை: யூ-டியூபர் பெலிக்ஸிற்கு மே 31ஆம் தேதி வரையில் நீதிமன்ற காவல் விதித்தது கோவை நீதிமன்றம்.
பெண் போலீசார் பற்றி அவதூறாக பேசியாக யூ-டியூபர் சவுக்கு சங்கர் மற்றும் பேட்டி வீடியோவை வெளியிட்ட தனியார் யூ-டியூப் சேனல் நிறுவனர் பெலிக்ஸ் மீது கோவை கிரைம் போலீசார், திருச்சி போலீசார், சென்னை, சேலம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் வழக்கு பதியப்பட்டுள்ளன.
இதில், ஏற்கனவே சவுக்கு சங்கர் மற்றும் பெலிக்ஸ் ஆகியோர் கோவை மற்றும் திருச்சி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு இருவரும் திருச்சி மத்திய சிறையில் இருந்து வந்த நிலையில், இன்று , யூ-டியூபர் பெலிக்ஸ் கோவையில் பதியப்பட்ட வழக்கின் விசாரணைக்காக கோவை அழைத்து செல்லப்பட்டார்.
அங்கு, கோவை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சந்தோஷ், இந்த வழக்கு தொடர்பாக வரும் மே 31ஆம் தேதி வரையில் தனியார் யூ-டியூப் சேனல் நிறுவனர் பெலிக்ஸை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்தார். இதனை அடுத்து பெலிக்ஸ் தற்போது திருச்சியில் இருந்து கோவை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக நேற்று சவுக்கு சங்கரை ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க திருச்சி நீதிமன்றம் திருச்சி போலீசாருக்கு அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் பல வருடங்கள் டேட்டிங் செய்து 2022-ல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமண…
பெர்த் : 4 போட்டிகள் அடங்கிய பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் போட்டியானது இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது.…
டெல்லி : கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருடைய கவனமும் அடுத்த ஆண்டு எப்போது ஐபிஎல் போட்டிகள் தொடங்கப்போகிறது என்கிற எதிர்பார்ப்பில் தான் உள்ளது.…
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 5ஆவது நாளாக அதிகரித்துள்ளதால், நகை பிரியர்கள் சோகத்தில் உள்ளனர். கடந்த 4…
சென்னை : ரஜினிகாந்தை அவரது இல்லத்திற்கு நேரில் சென்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது தற்போதைய அரசியல்…
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் சாய்ரா பானு இருவரும் விவாகரத்து செய்வதாக பேசி முடிவெடுத்து அறிவித்த நிலையில், இது ரசிகர்களுக்கு…