குஜராத்தில் மீண்டும் தமிழ்ப்பள்ளி.! அடிக்கல் நாட்டி துவங்கி வைத்த அமைச்சர் தங்கம் தென்னரசு.!
குஜராத், அகமதாபாத்தில் மூடப்பட்டு இருந்த தமிழ்வழி பள்ளி தற்போது மீண்டும் தொடங்கப்பட உள்ளது.
ஒவ்வொரு மாநிலத்திலும் வேற்று மாநில (வேற்று மொழி ) மாணவர்கள் பள்ளிப்படிப்பை மேற்கொள்ள எதுவாக அந்தந்த மொழியை முதன்மை பாடமாக கொண்ட பள்ளிகள் அமைக்கப்படுவதுண்டு. அப்படி செய்லபடும் பள்ளியில் மாணவர்கள் பற்றாக்குறை இருந்தால் மூடப்பட்டு விடும்.
தமிழ் பள்ளி : அப்படிதான், குஜராத், அகமதாபாத்தில் தமிழை முதல்படமாக கொண்டு உருவாக்கப்பட்ட தமிழ் பள்ளியில் மாணவர் சேர்க்கை குறைவாக இருப்பதாக கூறி 2020ஆம் ஆண்டு பள்ளி மூடப்பட்டது. தற்போது இந்த தமிழ் பள்ளியானது புத்தாக்கத்துடன் தொடங்கப்பட உள்ளது .
அடிக்கல் : இந்த பள்ளியின் புதிய கட்டடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு, தமிழக தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களால், அடிக்கல் நாட்டப்பட்டது. மேலும், அங்கு பள்ளி வளாகத்தில் திருவள்ளுவர் சிலையும் திறந்து வைக்கப்ட்டது. இதுவரை அந்த பள்ளியில் தமிழ்வழி கல்வியில் மட்டுமே கற்பிக்கப்பட்டது. ஆனால், புதுப்பிக்கப்பட்ட உள்ள பள்ளியில் தற்போது ஆங்கில வழி கல்வியில் தமிழ் உட்பட முக்கியமான 4 மொழிகளை கற்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.