நெல்லையில் பரபரப்பு., 8ஆம் வகுப்பு மாணவனுக்கு அரிவாள் வெட்டு! சக மாணவன் வெறிச்செயல்!
திருநெல்வேலி பாளையங்கோட்டையில் தனியார் பள்ளி ஒன்றில் 8ஆம் வகுப்பு மாணவன் சக மாணவனை அரிவாளால் வெட்டியுள்ளான். இதில் சக மாணவனும், தடுக்க முயன்ற ஆசிரியரும் காயமடைந்துள்ளனர்.

திருநெல்வேலி : திருநெல்வேலி , பாளையம்கோட்டை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் இன்று 8ஆம் வகுப்பு மாணவர்களிடையே ஏற்பட்ட தகராறில் ஒரு மாணவன் , தன்னுடன் பயிலும் சக மாணவனை அரிவாளால் வெட்டிய சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாளையங்கோட்டை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் பயின்று வந்த இரு மாணவர்கள் நண்பர்களாகவே இருந்தார்கள் எனக் கூறப்படுகிறது. அதன் பிறகு இருவருக்கும் இடையே எதோ பிரச்சனை ஏற்பட்டு பிரிந்ததாகவும், இன்று எதோ சில காரணத்தால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.
இதனை அடுத்து, மாணவன், தன் பையில் வைத்திருந்த அரிவாளை எடுத்து சக மாணவனை வெட்டியதாக தெரிகிறது. இதனை பார்த்த பெண் ஆசிரியர், இச்சம்பவத்தை தடுக்க முற்பட்டுள்ளார். அப்போது அந்த ஆசிரியைக்கும் வெட்டு காயம் ஏற்பட்டுள்ளது. இது காயமடைந்த்த மாணவன் மற்றும் ஆசிரியர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அரிவாளால் வெட்டிய மாணவனை போலீசார் தற்போது கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்தில் குழந்தைகள் பாதுகாப்பை அதிகாரிகள், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் என பலரும் உள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
வசூலில் சக்கை போடு… ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த GBU.!
April 15, 2025
சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்.!
April 15, 2025