திருவள்ளூரில் போதை மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்ட 7ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த விவகாரத்தில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில், கடந்த மாதம் 21ம் தேதி, போதைக்கு அடிமையான ஓர் 7ம் வகுப்பு படிக்கும் மாணவனை அவனது பெற்றோர்கள் போதை பழக்கத்தில் இருந்து மீட்க, சோழவரம் அருகே, அழிஞ்சிவாக்கம் பகுதியில் உள்ள தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்துள்ளனர்.
அப்படி சேர்க்கப்பட்ட அந்த மாணவன் நேற்று முன்தினம் கழிவறையில் தவறி விழுந்து அடிபட்டதாக கூறி சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளான். ஆனால், சிகிச்சை பலனின்றி மாணவன் உயிரிழந்துவிட்டார். இதனை தொடர்ந்து, மாணவனின் இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி பெற்றோர்கள் வைத்த கோரிக்கையின் பெயரில் போலீசார் விசாரணையை தொடங்கினர்.
இந்த விசாரணையில், சிறுவனை வைத்து சிலர் கட்டை போன்ற ஆயுதத்தால் அடித்ததும், அதனால் தான் மாணவன் உயிரிழந்ததும் கண்டறியப்பட்டது. இந்த சம்பவத்தின் பெயரில், தனியார் போதை மறுவாழ்வு மைய உரிமையாளர் விஜயகுமார், ஊழியர்கள் யுவராஜ், டில்லிபாபு, ஜீவிதன் ஆகிய 4 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…