போதை மறுவாழ்வு மையத்தில் 7ஆம் வகுப்பு மாணவன் மரணம்.! உரிமையாளர் உட்பட 4 பேர் உடனடி கைது.!

Default Image

திருவள்ளூரில் போதை மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்ட 7ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த விவகாரத்தில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

திருவள்ளூர் மாவட்டத்தில், கடந்த மாதம் 21ம் தேதி, போதைக்கு அடிமையான ஓர் 7ம் வகுப்பு படிக்கும் மாணவனை அவனது பெற்றோர்கள் போதை பழக்கத்தில் இருந்து மீட்க,  சோழவரம் அருகே, அழிஞ்சிவாக்கம் பகுதியில் உள்ள தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்துள்ளனர்.

அப்படி சேர்க்கப்பட்ட அந்த மாணவன் நேற்று முன்தினம் கழிவறையில் தவறி விழுந்து அடிபட்டதாக கூறி சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளான். ஆனால், சிகிச்சை பலனின்றி மாணவன் உயிரிழந்துவிட்டார். இதனை தொடர்ந்து, மாணவனின் இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி பெற்றோர்கள் வைத்த கோரிக்கையின் பெயரில் போலீசார் விசாரணையை தொடங்கினர்.

இந்த விசாரணையில், சிறுவனை வைத்து சிலர் கட்டை போன்ற ஆயுதத்தால் அடித்ததும், அதனால் தான் மாணவன் உயிரிழந்ததும் கண்டறியப்பட்டது. இந்த சம்பவத்தின் பெயரில், தனியார் போதை மறுவாழ்வு மைய உரிமையாளர் விஜயகுமார், ஊழியர்கள் யுவராஜ், டில்லிபாபு, ஜீவிதன் ஆகிய 4 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்