பொதுப்பணித்துறையின் கட்டுமான பணிகளில் சிவில் மற்றும் மின் பணிகளுக்கு தனித்தனியே ஒப்பந்தம் விடப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் 27.08.2021 அன்று சட்டப் பேரவையின் அவையில் பொதுப்பணித் துறைக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது,பொதுப்பணித் துறை மூலம் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகளில் ரூ.15.00 கோடி மதிப்பீட்டிற்குள்ள சிவில் மற்றும் மின்சாரப் பணிகள் தனித்தனியாக ஒப்பந்தம் (தனி ஒப்பந்தம்) மேற்கொள்ளப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.
இந்நிலையில்,பொதுப்பணித்துறையில் சிவில் மற்றும் மின்சாரப் பணிகளை தனித்தனி ஒப்பந்தங்களிலும்,கட்டிடம் தொடர்பாக ஒரே ஒப்பந்தத்திலும் நிறைவேற்றுவதற்கான நிதி வரம்பை நிர்ணயித்தல் தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.அதன்படி,பொதுப்பணித்துறையில் டெண்டர் எடுப்பதற்கு சிவில் மற்றும் எலக்ட்ரிக் ஒப்பந்ததாரர்கள் தனித்தனியே பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…
தூத்துக்குடி : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…