#Breaking : மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண் இணைப்பு.! மனு தள்ளுபடி.!
ஆதார் எண்ணை, மின் இணைப்பு எண்ணுடன் இணைப்பதை தடை கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்து, அதற்கான கால கேடு இந்த டிசம்பர் 31 வரையில் என குறிப்பிட பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய மக்கள் கட்சி தலைவர் ரவி என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
அதில், மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கையில், வாடகை வீட்டில் குடியிருப்போர், ஆதார் எண்ணை இணைக்கும் போது, அடுத்து வீடு மாறி செல்கையில் அவர்களுக்கு அது சிக்கலாக அமையும். மேலும், சிறப்பு முகாம்களில் மாற்று ஆவணங்களை தாக்கல் செய்வது குறித்து உரிய விளக்கமில்லை எனவும் அதில் குறிப்பிட பட்டு இருந்தது.
இதன் காரணமாக ஆதார் எண்ணை , மின் இணைப்பு எண்ணோடு இணைக்க தடை செய்ய வேண்டும் மனுதாரர் குறிப்பிட்டு இருந்தார். இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு நீதிபதி டி.ராஜா தலைமையில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கு விசாரணையில், தமிழக மின்சாரத்துறை வாதிடுகையில், உரிய ஆய்வு மேற்கொண்டு தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என வாதிடப்பட்டது. இதனை அடுத்து மின் இணைப்பு – ஆதார் எண் இணைப்பு நீக்க மனு தள்ளுபடி உயர்நீதிமன்ற அமர்வால் செய்யபட்டது.