கள்ளக்குறிச்சி பள்ளியை அரசு ஏற்று நடத்த உத்தரவிடக் கோரி தேசிய மக்கள் கட்சி தலைவர் வழக்கு.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி கடந்த ஜூலை 13-ஆம் தேதி பள்ளி வளாகத்தில் தற்கொலை செய்து கொண்டார். மாணவி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி, நீதி கேட்டு தொடர்ந்து மாணவியின் தாயார் பல்வேறு போராட்டங்களை நடத்தினார். அதன் பிறகு ஜூலை 17-ஆம் தேதி பள்ளி முன் நடைபெற்ற போராட்டம் மிகப்பெரிய வன்முறையாக வெடித்ததில் பள்ளி முழுவதும் சூறையாடப்பட்டது. பள்ளி வாகனங்களுக்கு தீ வைப்பு, சான்றிதழ்கள் எரிப்பு உள்ளிட்ட பள்ளி முழுவதும் வன்முறையால் சூறையாடப்பட்டது.
இதனால் பள்ளி தொடர்ந்து மூடப்பட்டு, அப்பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு மற்றும் அருகாமையில் உள்ள பள்ளிகளில் சேர்க்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனிடையே, மாணவர்களின் எதிர்காலம் கருதி மீண்டும் பள்ளியை திறந்து சீரமைக்க அனுமதிகோரி பள்ளி நிர்வாகம் வலியுறுத்தி இருந்தது. இதனைத்தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் கலவரத்தில் சூறையாடப்பட்ட தனியார் பள்ளி மீண்டும் திறக்கப்பட்டு மறுசீரமைப்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் மறுசீரமைப்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் ஆட்சியர் 45 நாட்கள் அனுமதி தந்ததை தொடர்ந்து, தனியார் பள்ளியில் போலீஸ் பாதுகாப்புடன் மறுசீரமைப்பு பணிகள் தொடங்கியிருந்தது. இந்த நிலையில், கலவரத்துக்குள்ளான கள்ளக்குறிச்சி பள்ளியை அரசு ஏற்று நடத்த உத்தரவிடக் கோரி தேசிய மக்கள் கட்சி தலைவர் எம்எல் ரவி என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவரது மனுவில், தங்கள் குழந்தைகளை வேறு பள்ளிகளில் சேர்க்க மறுப்பதாகவும், கட்டணம் செலுத்தி விட்டதால் மற்றொரு பள்ளியில் சேர்க்கை பெற இயலவில்லை என பெற்றோர் கூறியுள்ளனர். மேலும், கலவரத்தில் சேதமான பள்ளி மீண்டும் செயல்பட அனுமதி பெற்றிருந்தாலும், மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் அச்சம் நிலவு வருகிறது. கள்ளக்குறிச்சி பள்ளியில் படித்ததால் வேறு பள்ளியில் சேர்க்க மறுப்பதாகவும் புகார் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை : சிபிஎம் மாநில செயலாளர் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சி…
சென்னை : பொங்கல் பண்டிகை வந்துவிட்டது என்றாலே ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்ப்பதற்கும் விளையாட நினைக்கும் வீரர்களும் குஷியாகிவிடுவார்கள் என்றே கூறலாம். இந்த…
சென்னை : கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் வரும் ஜனவரி 11-ஆம் தேதி சில மாவட்டங்களில்…
அமெரிக்கா : நடந்து முடிந்த தேர்தலில், புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம்…
குஜராத் : இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான பயிற்சி ஹெலிகாப்டர் ( ALH Dhruv ) இன்று (ஜனவரி 5)…
கோவை : கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம்,…