அண்ணாமலை மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு.! நடந்தது என்ன.? 

BJP State President Annamalai

தர்மபுரி மாவட்டம் பொம்மிடி காவல்நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பொது அமைதியை சீர்குலைக்கும் வண்ணம் நடந்துகொண்டதாக இளைஞர் ஒருவர் புகார் அளித்து உள்ளார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் “என் மண் என் மக்கள்” எனும் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். தர்மபுரியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அண்ணாமலை, கடந்த 8ஆம் தேதி பொம்மிடி அருகே பள்ளிப்படி எனும் ஊரில் உள்ள லூர்து அன்னை தேவாலயத்தின் உள்ளே நுழைய முற்பட்டார்.

ஓ.பி.எஸ் மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு!

அப்போது அங்கிருந்த இளைஞர்கள் சிலர், அண்ணாமலை தேவாலயத்திற்குள் உள்ளே நுழைய கூடாது என தடுத்து நிறுத்தினர். பாஜக ஆளும் மணிப்பூரில் ஏற்பட்ட கலவரத்தில் கிறிஸ்தவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டனர் என்றும் தேவாலயங்கள் இடிக்கப்பட்டது என்றும் குற்றம் சாட்டி அதனால் பாஜகவினர் உள்ளே வரக்கூடாது என வாக்குவாதம் செய்துள்ளனர்.

இதனால் பாஜக தலைவர் அண்ணாமலை அங்குள்ள இளைஞர்களிடம் சமாதானம் செய்ய முயற்சித்தார். இருந்தும் அவர்கள் உள்ளே விட மறுத்ததால் எங்களை உள்ளே விடவில்லை என்றால் இங்கே தர்ணாவில் ஈடுபடுவோம் என வாக்குவாதம் செய்தார். இதனால் அங்கு சற்று பதற்றமான சூழல் நிலவியது.

இதனை அடுத்து அப்பகுதியை சேர்ந்த கார்த்தி எனும் இளைஞர்  பொம்மிடி காவல் நிலையத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை மீது புகார் அளித்து இருந்தார்.  மக்களிடையே நிலவும் பொதுஅமைதியை சிதைக்கும் வகையில்  பாஜக தலைவர் அண்ணாமலை செயல்பட்டதாக கூறி அவர் மீது 3 பிரிவுகளில் பொம்மிடி காவல் நிலைத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டது. சட்டப்பிரிவு 153 (ஏ), 504, 505(2) என்ற 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்