பாஜக – காங்கிரஸ் கட்சியினர் மோதல்.! 53 பேர் மீது வழக்குப்பதிவு.! 13 பேர் கைது.!
நாகர்கோவிலில் காங்கிரஸ் – பாஜக இடையே நடந்த மோதலில் 53 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடுமுழுவதும் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பாஜக – காங்கிரஸ் தாக்குதல் :
இன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பாஜக அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். அப்போது பாஜக நிர்வாகிகளுக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே ஏற்பட்டு அது தகராறாக மாறியது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
53 பேர் மீது வழக்குப்பதிவு :
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக பாஜகவினர் உட்பட 53 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுவரை 13 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
காங்கிரஸ் கண்டனம் :
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் தலைமை தனது டிவிட்டர் பக்கத்தில் கண்டனங்களை பதிவு செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.