தனியார் கல்லூரி சுற்றுச்சுவர் இடிந்து 5 பேர் உயிரிழந்த விவகாரத்தில் 3 பேர் மீது வழக்குப்பதிவு…!
தனியார் கல்லூரி சுற்றுச்சுவர் இடிந்து பேர் உயிரிழந்த விவகாரத்தில் 3 பேர் மீது வழக்குப்பதிவு.
கோயம்புத்தூரில் தனியார் கல்லூரி பகுதியில் சுற்றுச்சுவர் கட்டுமான பணியின்போது, சுவர் இடிந்து விழுந்ததில் 5 புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், கோவை சுகுணாபுரம் பகுதியில் தனியார் கல்லூரி சுற்றுச்சுவர் இடிந்து பேர் உயிரிழந்த விவகாரத்தில், தனியார் கட்டுமான நிறுவன உரிமையாளர் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, குனியமுத்தூர் போலீசார் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில், தனியார் கட்டுமான நிறுவன உரிமையாளர் சீனிவாசன், திட்ட மேலாளர் சாதிக் உல் அமீர் , பொறியாளர் அருணாச்சலம் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.