#Breaking:கிரிப்டோகரன்சி விளம்பரத்துக்கு தடையா?- உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு!

சென்னை:கிரிப்டோகரன்சி விளம்பரத்துக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கிரிப்டோகரன்சி விளம்பரத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நெல்லையை சேர்ந்த அய்யா என்பவர் மனு அளித்துள்ளார்.
அந்த மனுவில்,கிரிப்டோகரன்சிக்கு சட்டபூர்வ அங்கீகாரம் இல்லாததால் அதனைப் பயன்படுத்த வேண்டாம் என மத்திய அரசு,ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளன எனவும்,உரிய விதிகளை வகுக்கும் வரை கிரிப்டோகரன்சி விளம்பரத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் குறிப்பட்டுள்ளார்.
மேலும்,அதிக வட்டி தருவதாக கூறி கேரளாவில் ரூ.100 கோடி வரை மோசடி செய்ததாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த மனுவில் அய்யா குறிப்பிட்டுள்ளார்.
இந்த பொதுநல வழக்கு மீதான விசாரணை அடுத்த வாரம் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
“இவன் என்ன அழைப்பது என்று இருக்காதீங்க”…மீண்டும் அழைப்பு விடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
March 3, 2025
ரூ.480 கோடியில் சிப்காட்., ஹஜ் இல்லம்., நாகைக்கு 6 திட்டங்களை அறிவித்தார் முதலமைச்சர்!
March 3, 2025