கல்வியை பொது பட்டியலுக்கு மாற்றியதை எதிர்த்து வழக்கு!
கல்வியை பொது பட்டியலுக்கு மாற்றியதை எதிர்த்த வழக்கில் 3 நீதிபதிகள் அமர்வை அமைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு.
கல்வியை மாநில பட்டியலில் இருந்து பொது பட்டியலுக்கு மாற்றியதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. திமுக எம்.எல்.ஏ. எழிலன் தொடர்ந்த வழக்கை விசாரிக்க 3 நீதிபதிகள் அமர்வை அமைக்க சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி, சுந்தரமோகன் அமர்வு உத்தரவிட்டனர்.
அரசியல் சட்ட பிரச்சனை தொடர்பான வழக்கு என்பதால் 3 நீதிபதிகள் அமர்வை அமைக்க வேண்டும் என்று மனுதாரர் கோரிக்கை ஏற்கப்பட்டது. கல்வியை மாநில பட்டியலில் இருந்து பொது பட்டியலுக்கு மாற்றியதை எதிர்த்து திமுக எம்.எல்.ஏ. எழிலனின் அறம் செய்ய விரும்பும் என்ற தொண்டு நிறுவனத்தின் மூலமாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.