பாஜகவுக்கு வழங்கப்பட்ட தாமரை சின்னம் ஒதுக்கீட்டை ரத்து செய்ய இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அடுத்தாண்டு நாடாளுமன்ற தேர்தல், இந்தாண்டு இறுதிக்குள் சத்தீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம், மத்திய பிரதேசம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரதான அரசியல் கட்சிகளான பாஜக, காங்கிரஸ் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதனால், தற்போது 5 மாநில தேர்தல் களம் சூடிபிடித்துள்ளது.
இந்த சூழலில் பாஜகவுக்கு வழங்கப்பட்ட தாமரை சின்னம் ஒதுக்கீட்டை ரத்து செய்ய இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சமூக ஆர்வலரும், அகிம்சை சோசலிச கட்சியின் நிறுவன தலைவருமான ரமேஷ் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தேசிய மலரான தாமரையை ஒரு அரசியல் கட்சிக்கு ஒதுக்கியது அநீதி. இது நாட்டின் ஒருமைப்பாட்டை இழிவுபடுத்தும் விதமாகும்.
கத்தாரில் 8 இந்தியர்களுக்கு மரண தண்டனை விதிப்பு – இந்தியா அதிர்ச்சி!
இந்த விவகாரம் தொடர்பாக கடந்த செப்டம்பர் மாதம் இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டது. ஆனால் தனது மனு மீது நடவடிக்கை எடுக்காத இந்திய தேர்தல் ஆணையத்தின் செயல் இயற்கை நீதிக்கு எதிரானது. எனவே, எனது மனுவை பரிசீலித்து, பாஜகவுக்கு வழங்கப்பட்ட தாமரை சின்னத்தை ரத்து செய்ய இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரி இன்று முறையிடப்பட்டது. ஆனால் இதனை ஏற்க ஐகோர்ட் நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…