அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான ஒரு வழக்கை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம்.
அதிமுக ஆட்சியின்போது சென்னை, கோவை மாநகராட்சி பணிகளுக்கு டெண்டர் வழங்கியதில் முறைகேடு செய்ததாக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி வழக்கு பதிவு செய்யபட்டது. சென்னை, கோவை மாநகராட்சி பணிகள் தொடர்பாக ரூ.800 கோடி அளவுக்கு டெண்டர் வழங்கியதில் முறைகேடு என குற்றச்சாட்டப்பட்டது.
இதுபோன்று எஸ்பி வேலுமணி அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக 58 கோடி ரூபாய் அளவிற்கு சொத்து குவித்ததாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. வேலுமணி ஆதரவாளர்களுக்கு டெண்டர் வழங்க விதிகள் மாற்றி அமைக்கப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை குற்றசாட்டி வழக்குப்பதிவு செய்திருந்தது.
தன் மீதான டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்யக்கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான சொத்துக்குவிப்பு வழக்கை ரத்து செய்ய முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கை ரத்து செய்யகோரிய வேலுமணியின் கோரிக்கையை நிராகரித்தது உயர் நீதிமன்றம்.
இருப்பினும், மாநகராட்சி பணிகளில் டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக எஸ்.பி.வேலுமணி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை மட்டும் உயர் நீதிமன்றம் ரத்து செய்து, வழக்கை ரத்து செய்யக்கோரி எஸ்பி வேலுமணி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…