சென்னை : பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்ய அனுமதி அளிக்கவில்லை என ஆளுநர் மாளிகை தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் அண்ணாவை பற்றி பேசியது பெரும் சர்ச்சையாக மாறிய நிலையில், சேலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்யவேண்டும் என்று சேலம் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
இதனையடுத்து, இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்ய ஆளுநர் ஒப்புதலுடன் தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது. அதன்பிறகு, சமீபத்தில், அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்ய ஆளுநர் ஒப்புதல் கொடுத்ததாகவும் செய்திகள் வெளியானது. இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கிரிமினல் வழக்கில் வழக்குப்பதிவு செய்ய அனுமதி அளித்துள்ளதாக வெளியான செய்தி வதந்தியான செய்தி என்று ஆளுநர் மாளிகை தரப்பில் இருந்து அறிக்கை மூலம் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியான அறிக்கையில் ” தமிழ்நாடு ஆளுநர் தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது கிரிமினல் வழக்கில் வழக்குப்பதிவு செய்ய அனுமதி அளித்துள்ளதாக ஊடகங்களில் பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு ஆளுநர் மாளிகைக்கு கடந்த இரண்டு நாட்களாக பொதுமக்களிடம் இருந்து பரபரப்பு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது.
அண்ணாமலை அவர்களுக்கு எதிரான கிரிமினல் வழக்கு குறித்து தமிழ்நாடு ஆளுநர் மாளிகை எந்த ஒரு தகவலும் அறிந்திருக்கவில்லை. மேலும், அது தொடர்பான அனுமதி உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை தெரிவிக்கப்படுகிறது” என அறிக்கையில் கூறப்பட்டு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னை : நாளை ( நவம்பர் 27.11.2024) எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்கிற விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையில்…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
மயிலாடுதுறை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது…
கடலூர் : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : அமரன் படத்திற்கு 300 கோடி வசூல் கிடைத்ததை விடப் பாராட்டு மழைகள் தான் பெரிய அளவில் குவிந்தது…