கட்டுப்பாட்டை இழந்து 120 அடி கிணற்றுக்குள் கார் வேகமாக பாய்ந்த நிலையில், காரில் பயணித்த 3 மாணவர்கள் உயிரிழப்பு.
கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்தவர் ரோஷன். இவருக்கு வயது 18. கல்லூரியில் பயின்று வரும் இவர், கேரள மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர். இந்த நிலையில் நேற்று ஓணம் பண்டிகை கொண்டாடுவதற்காக தனது நண்பர்களுடன் இணைந்து தனது உறவினர் ஒருவரின் காரை எடுத்துக்கொண்டு கோவை சிறுவாணி சாலையில் உள்ள செலிப்ரிட்டி கிளப்பில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
அதன் பின் இரவு முழுவதும் அங்கு தங்கிய ரோஷன் மற்றும் அவரது நண்பர்கள் இன்று காலை ஆறு மணி அளவில் காரில் வடவள்ளியில் உள்ள தனது வீட்டிற்கு வந்துள்ளனர். வரும் வழியில் ரோஷன் காரை அதிவேகமாக இயக்கி வந்துள்ளார். அப்போது வேகமாக சென்ற கார் போகும் வழியில், தொண்டாமுத்தூர் இடையே உள்ள தென்னமநல்லூர் பகுதியில் செல்லும் போது கட்டுப்பாட்டை இழந்து பழனிசாமி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தின் இருப்பு கோட்டை உடைத்துக் கொண்டு, உள்ளே புகுந்த கார் அங்கிருந்து 120 அடி அள கிணற்றுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது.
கிணற்றில் 50 அடிக்கு தண்ணீர் இருந்ததால் நாலு பேரும் நீரில் மூழ்கி உயிருக்கு போராடியுள்ளனர். இந்த நிலையில் காரை ஓட்டி வந்த ரோஷன் மட்டும் காரை திறந்து கொண்டு உயிர் தப்பினார். அவரது நண்பர்கள் காரிலிருந்து வெளியே வர முடியாமல் சிக்கியுள்ளனர்.
நீரில் மூழ்கி நண்பர்கள் மூன்று பேரும் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் ரோஷன் வெளியே வந்து அளித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வரைந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் கிணற்றில் இருந்த காரை மீட்டனர்.
மேலும் 3 பேரின் சடலங்களையும் கிணற்றிலிருந்து மீட்ட போலீசார், சடலத்தை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை : 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற முதல் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர் வெற்றிகளை பெற்று வருகின்றன. …
ஜெட்டா : 2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் முதல் நாள் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில், சென்னை முதல்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் நேற்றைய தினம் நிறைவடைந்தது. இன்றைய தினம் இரண்டாம்…
சிங்கப்பூர் :உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் இன்று முதல் தொடங்குகிறது. சிங்கப்பூரின் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசாவில்…
மகாராஷ்டிரா : நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…