சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு.! தடுப்பு மீது மோதி கார் தீ விபத்து.!
சென்னை விமான நிலையத்தில் ஓர் கார் தடுப்பு மீது மோதி தீ விபத்து ஏற்பட்டது.
இன்று சென்னை விமான நிலையத்தில் ஏர் இந்தியா பணிமனைக்குள் கார் ஒன்று நிலை தடுமாறி பணிமனைக்குள் இருந்த போக்குவரத்து தடுப்புகள் மீது மோதியது.
இதில் காரில் இருந்த பெட்ரோல் டேங்க் உடைந்தது. இதில் கார் தீப்பிடித்து எரிய தொடங்கியது. உடனடியாக தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு, தீயணைப்பு வண்டிகள் மூலம் விரைந்து செயல்பட்டு, தீயை அணைத்தனர். இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.