மக்களை ஏமாற்றி கார்ப்பரேட் நிறுவனங்களை காப்பாற்றும் பட்ஜெட் – முத்தரசன்
அதானி மோசடி குறித்து பேசாமல் கார்ப்பரேட் நட்புக்கு விசுவாசம் காட்டியுள்ளது மத்திய அரசு என பட்ஜெட் குறித்து முத்தரசன் கருத்து.
நாடாளுமன்றத்தில் இன்று 2023-24 க்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 5-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்துள்ள நிலையில், மத்திய பட்ஜெட் 7 முக்கிய அம்சங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த பட்ஜெட் தாக்கல் குறித்து அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில், இதுகுறித்து சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் அவர்கள் கூறுகையில், மக்களை ஏமாற்றி கார்ப்பரேட் நிறுவனங்களை காப்பாற்றும் பட்ஜெட். அதானி மோசடி குறித்து பேசாமல் கார்ப்பரேட் நட்புக்கு விசுவாசம் காட்டியுள்ளது மத்திய அரசு.
விவசாயிகளுக்கு ரூ.20 லட்சம் கோடி கடன் திட்டம், கானல் நீரில் தாகம் தீர்ப்பது போல் உள்ளது; 93% அமைப்புசாரா தொழிலாளர்கள், புலம்பெயர் தொழிலாளர்களின் நலன் புறக்கணிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.